பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் வளர்த்த தமிழ்-பெளத்தம் 87 சில வரிகளே கிடைக்க ஒரு சில பெயரளவில் வாழ்கின்றன. எனவே பெளத்தம் வளர்த்த தமிழ் ஓரளவு வரையறுக்கப் பெற்றுவிட்டது. தமிழ் மகளாகிய மணிமேகலையைப் பற்றிய பெருங் காப்பியம் போன்றே, வடநாட்டில் புத்தர் காலத்தில் வாழ்ந்த குண்டலகேசி என்னும் மகளை-துறவியைப் பற்றி எழுந்த நூல் ஐம்பெருங்காப்பியத்துள் மற்றொரு காப்பிய மாகிய குண்டலகேசி'யாகும். இதன் ஆசிரியர் நாத குத்தனார் ஆவர். இதில் ஒரு சில பாடல்களே இப்போது நமக்குக் கிடைக்கின்றன. மணிமேகலையைப் போன்று அகவற்பாவிலன்றி விருத்தத்தால் ஆகிய காரணத்தால் இது குண்டலகேசி விருத்தம் எனவும் வழங்கப்பெறும். எனவே இது காலத்தால் பிந்திய நூலாகும் என்பது வெளிப் படை. மேலும் மணிமேகலையில் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை வழியே தொடங்கப்பெற்ற சமயங்கள் பற்றிய தருக்கநெறி வளர்ச்சியடைய, பின்வந்த இந்த நூலை தருக்க நூல் என்னுமாறு அமைத்து, பிற சமயங்களைக் கண்டிக்கும் வகையில் எழுதப்பெற்றது போலும். எனவே தான் இது காலத்தை வென்று வாழவில்லை. இந்நூலே யன்றி, வேறுசில பெளத்த நூல்களும் ஆங்காங்கே உரைகளில் காணும் மேற்கோள் பாடல்களாலும் பிறவற்றாலும் பெயரளவில் வாழ்கின்றன. அவற்றுள் 'சித்தாந்தக் கொள்கை என்னும் சமயக் கொள்கை விளக்கும் நூல் திருப்பதிகம்’ என்னும் பெளத்தர் போற்றும் தோத்திர நூல், புத்தருக்குப் பலவகையில் உதவிய விம்பசாரன்’ என்னும் அரசனைப்பற்றிய விம்பசாரன் கதை’ என்ற நூல் போன்றவை குறிப்பிடத்தக்கனவாம். இவையன்றி பெளத்தர் தம் அறிவும் ஆற்றலும் உள்ளிட்டு உணர்த்திய எத்தனையோ தமிழ் நூல்கள் காலவெள்ளத்தால் அடித்துச்