பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கல்லவை ஆற்று மின் செல்லப் பெற்றிருக்கும். இந்த நூல்களையெல்லாம் பெரும் பாலும் பெளத்த சமயத் துறவிகளே இயற்றியமையும், அவர் களும் துறவு நிலையினையும் அதைச் சார்ந்த பிற கொள்கை களையும் உணர்த்தியதோடு அமைந்து விட்டமையும், தமிழ்ச் சமுதாய அடிப்படை நெறியினின்று அவை முற்றும் மாறு பட்டமையும் இவை போன்ற பிற காரணங்களுமே அவை வழக்கிழந்தமைக்குக் காரணங்களாக அமைந்திருக்கலாம். எனினும் பெளத்தர் தமிழுக்குச் செய்த தொண்டினை என்றும் உலகுக்குக் காட்டி உயர்ந்து நிற்பது மணிமேகலை என்ற பெருங்காப்பியமாகும். எனவே அந்நூலுள் அமைந்த சமுதாய நெறிபற்றிய விளக்கங்களில் இரண்டொன்று கண்டு அமையலாம் என்று கருதுகிறேன். மணிமேகலை துறவுநூல் என்று கூறப்பெறினும், சமுதாய வாழ்வின் அடிப்படை நெறியாகிய இல்லறத்தைத் திட்டமாக வற்புறுத்துகின்றது. பத்தினி இல்லோர் பல்லறம் செயினும் புத்தேள் உலகம் புகார்’ (22–117 18) என்ற அடிகளில், இல்லற வாழ்வை ஏற்காதவர் என்ன அறம் செயினும் பயனில்லை என்பதைச் சாத்தனார் வற்புறுத்திக் காட்டுகிறார். மேலும் துறவியாகிய மணிமேகலையின் கையுள்ள வெற்று 'அமுதசுரபி', சிறந்த இல்லறத்தாளாகிய ஆதிரையின் கையினாலே சோறிடப் பெற்ற பிறகே எடுக்க எடுக்கக் குறையாத நல்ல உணவைத் தந்தது எனக் காட்டி அந்த இல்லற நெறியைப் போற்றுகிறார். அப்படியே துறவறத்தினையும் அதனொடு சார்ந்த பிறவற்றையும் அறமெனக் காட்டாது, உலகில் இன்றியமையா உணவினை அளிக்கும் சிறப்பினையே அறமெனக் காட்டுகிறார்.