பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் வளர்த்த தமிழ்-பெளத்தம் 89 "அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாதிதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்' (25-228 மு 31), எனக் காட்டுவதோடு, இந்த உணவிடும் அறத்தாலேயே மணிமேகலை உயர்வடைந்ததாகச் சுட்டுகிறார். மேலும் வள்ளுவர் போற்றும் தெய்வக் கற்பு நெறியினைச் சுட்டி, பத்தினிப் பெண்டிர் ஏவல் வழியே இயற்கையும் செயலாற்றும் திறனைத் 'தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய் (25.57 to 61) எனச் சுட்டி, நாட்டில் பெண்கள் மேற்கொள்ளும் நல்ல கற்பு வாழ்வினை விளக்குகிறார். இப்படியே சாதாரண மக்கள்-சமுதாயத்தொடு பொருந்திய மக்கள் வாழவேண்டிய வாழ்க்கை நெறிமுறை களையும் மேற்கொள்ள வேண்டிய அறங்களையும் ஆங்காங்கே விளக்கிக் காட்டிச் செல்லும் சாத்தனார் தம் வாழ்வொடு பொருந்திய வாய்மொழிகளே மணிமேகலை’யை வாழவைக்கின்றன. சிலம்பும் மேகலையும் தமிழில் ஆசிரியப் பாவில் எழுந்த முதல் காப்பியங்கள். அவை இரண்டும் இந்த அறநெறி அடிப்படையிலேயே, காலத்தால் பின் தோன்றிய பல மறைய, சிறக்க வாழ்கின்றன. எனவே சாத்தனார் தம் சமய உண்மையொடு சமுதாய வாழ்வின் அடிப்படை உண்மைகளையும் உணர்த்திச் சாகாவரம்பெற்றுவிட்டார். மேலும் பெளத்தர், அக்காலத்தில் கி.பி. தொடக்கத்துக்கு முன்பே, முதன் முதலாகத் தமிழ்நாட்டில் கல்வெட்டுக்களைச் செதுக்கினர். அவற்றில் பிராமி எழுத்தே கையாளப் 広ー6