பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கல்லவை ஆற்றுமின் பெற்றது. அந்த எழுத்தை நாடு முழுவதும் பரவச் செய்தவர் கள் பெளத்தரே என்பர். எனவே தமிழ்நாட்டிலும் இலங்கை யிலும் அவர்கள் கல்வெட்டுகள் பல உருவாயின. தமிழ் மொழியின் இன்றைய எழுத்து வழங்கும் மரபுக்கு அப்பிராமி’ எழுத்தும் அதன் வழி எழுந்த வட்டெழுத்தும் அதற்குப்பின் கிரந்த எழுத்தும் பிறவும் காரணமாயின என அறிஞர்கள் சுட்டிக் காட்டுவதால் தமிழ்மொழியின் எழுத்தின் செம்மைக்கும் அமைப்பிற்கும் பெளத்தம் சிறந்த பணி செய்துள்ளது எனவும் கொள்ள இடமுண்டாகிறது. இவ்வாறு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பரந்து நின்று மக்களைப் பிணித்து ஆண்டு வாழ்ந்த பெளத்தம் பல சமய, சாத்திர, தருக்க இலக்கியங்களையும் இலக்கணங்களை யும் இயற்றியதுடன் எழுத்து வகையினையும் முறைப் படுத்தித் தமிழை வளர்த்து உதவிற்று என்பது உணரத்தக்க தாகும். ஆம் அப்பெளத்தர் தம் தொண்டின் திறத்தாலே தமிழ் வளர்த்த மரபினை மணிமேகலையும் பிறவும் என்றும் உலகுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் என்பது உண்மை எனக் கூறி, அவர்தம் தொண்டு சிறக்க என வாழ்த்தி அமைகின்றேன். வணக்கம், வ.வே.சு. ஐயர் தமிழ் இலக்கியப் பணி 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகன் சொல்வதில் ஓர் - மகிமை இல்லை திறமான புலமைஎனில் பிற நாட்டோர் அதை வணக்கம் - செய்தல் வேண்டும்’ என்று இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார் பாடி, தமிழன் செய்ய