பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t வ.வே.சு. ஐயர் தமிழ் இலக்கியப்பணி 95 முன்னுரையில் அழகாக எடுத்துக் காட்டுகின்றார். அவர்தம் ஆங்கிலத் தொடர் மொழியினை அப்படியே தருகிறேன். “I spoke of Valmiki's work as the original of Kamban's Ramayana. But, Kamban has not translated Valmiki. He has merely taken the story immortalised by the Aryan sage and though he has followed it closely enough in all its details, has written an entirely original poem’ (Bhavans Editor , p.1) இந்த உண்மையினைப் பலவிடங்களில் ஐயர் அவர்கள் விளக்கிக் காட்டவும் தவறவில்லை. நல்ல இலக்கியம் அது வழங்கும் நாட்டுமக்கள் மரபுகளுக்கு ஏற்ப இல்லையாயின் வாழாது என்பதைச் சுட்டிக்காட்டி இலக்கிய மரபினை விளக்கும் ஐயர்தம் இலக்கியப்பணி போற்றற்குரிய ஒன்றல்லவா! இவ்வாறே வால்மிகத்தில் இல்லாத இரணியப் படலத்தினைக் கம்பன் புகுத்திய காரணத்தையும் யுத்தத்தைப் பற்றி இராவணன் சூழ்ந்து ஆராய்ந்த அந்த வேளையில் வீடணர் மாற்றான் வலி விளக்கும் முகத்தால் அதை விளக்கிய வகையினையும் தெளிவு படுத்தி ஓர் இலக்கிய விமர்சனம் செய்கின்றார் ஐயர் அவர்கள் (P. 142-143). சீதையைக் கண்ட அனுமன் கூறிய தனிமொழிப் பாடல் களைத் திறம்பட மொழி பெயர்த்து, அங்கே கம்பர் வால்மிகியை எவ்வாறு விஞ்சுகிறார் என்பதைத் தெளிவாக்கி, இறுதியில் அது பற்றித் தன் கருத்தையும் அதன் வழியே கம்பன் நிலைநாட்டிட விரும்பிய அறநெறியினையும் சுட்டு கிறார். இதோ அவர் வாக்கு. 'The reader will agree after reading the above that Kamban has risen to the highest idaals of loyalty to a heroic master and of love of Dharma in this solilogue of Hanuman. (p. 196) -