பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தணுர் 3.

களை மொழிந்தும், தன் தாய் தந்தையரைக் களிப்புறச் செய்தது. குழந்தை தன் உடலளவிற்குச் சிறிது பெரிய தலையையுடையதாயிருந்தது பற்றி, அது கண்ட பெரியாரெல்லாம், பெருந்தலைச் சாத்தன் என வழங்கி, பிற்காலத்து இவன் புலமை சான்று வீறி விளங்குவன்,' என்று கூறி வியந்தனர்.

இங்ங்ணம் வளர்ந்து வந்த பெருந்தலைச் சாத்தனர், ஐந்தாண்டு நிறைந்து விளங்கினர். பின்னர்த் தந்தை யார் பிள்ளேக்கு நன் முழுத்தத்தில் எழுத்தறிவித்து, அவரை ஒரு கணக்காயர் பள்ளியிற்சேர்த்தனர். சாத் தருைம் கணக்காயரிடம் நெடுங்கணக்குக் கற்றுச் சொற்ருெடர்களே வாசிக்கும் பயிற்சியடைந்து, இய விசைநாடக இலக்கணங்களின் குத்திரங்களையும் இலக் கிய மூலங்களையும் கெட்டுருச்செய்து முடித்தனர். இங்ங்ணம் இளமையிற் செய்ய வேண்டிய பயிற்சியில் சிலவாண்டுகள் கழிந்த பின்னர்ச் சாத்தனர், புலமை மிக்க தம் தந்தையாரிடத்துக் கற்க வேண்டிய தமிழ் மொழியிலுள்ள பேரிலக்கண இலக்கிய நூற்பொருள் களையெல்லாம் சிலையில் எழுத்துப்போல மனத்திற் பதி யக் கற்று, கோக்கமைந்த பாக்களே விரைவில் யாக்கும் வலிமை பெற்றுத் தம் தந்தையார் மூலங்கிழார் போலத் தமிழகம் புகழும் ஆன்ற புலமையிற்சான்று, கிறை மொழி வாய்ந்த பெருமையுடையராய் விளங்கினர். புலவரிடம் அறிஞரெல்லாம் நன்மதிப்புடன் ஒழுகி, அவ ரைச் சாத்தனுர் என உயர்வு தோன்ற வழங்கினர்.

இங்ங்ணம் சீரிய புலமை மிக்க பெருந்தலைச் சாத்த ஞர் மனப்பருவத்தை அடைந்ததைக் கண்ட இவர்தம் தந்தையார், இவர்க்குப் பெண்மை கலங்கணிக்தொழுகும் ஒரு குலமங்கையைத் தேடி அடைந்து, மணவினையை