பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நல்லிசைப் புலவர்கள்

யென விரைந்து சென்றது. இங்கனம் தம்மூர் கோக்கி வரும் புலவரேறு, புலவர்களின் அருமை பெருமை அறி யாதும். தமது புலமையின் வீறு உணராதும் வரிசையின் றிச் சிறிது கொடுத்தவனகிய இளவெளிமானுக்குப் புல வரிது; மிகுதிப்பாட்டையும், அவரது தி: மறிந்து கொடுப்போரது தகுதிப்பாட்டையும் நன்கு அறிவுறுத் தக் கருதி, இளவெளிமானது ஊர் முகமாக த் தாம் ஊர்ந்து செல்லும் களிற்றைச் செலுத்தி, அதனே அவ னது காவன்மரத்தில் பிணித்துவிட்டு, இளவெளிம, னுழைச் சென்று, -

இரவலர் புரவலே நீயு மல்லை:

புரவலர் இரவலர்க் கில்லை யு மல்லர் ; இரவல ருண்மையுங் காணினி : இரவலர்க் கீவோருண்மையுங் காணினி ; நின்னுார்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் ருேன்றல்! செல்வல் யானே.” என்ற செய்யுளால், இரப்போர்க்குக் கொடுத்துப் பாது காப்பவன் நீ ஒருவனே பல்லன் பாதுகாப்போர் யாசிப் பவர்களுக்கு இல்லாமற் போகவுமில்லே; இனிப் புலவர்க் குள்ள பெருந்தன்மையை என்னளவிலே காண்பாயாக அவர் தகுதியறிந்து கொடுப்போரிருப்பதையும் பார்ப்பா யாக. உன் ஊரில் உள்ள காவலையுடைய மரம் வருந்தும் படியான் கொண்டு வந்து கட்டிய உயர்ந்த கல்லிலக்கண மமைந்த யானை, எனது பரிசில்; விரைவான கதி பொருங் திய குதிரைகளையுடைய தலைவனே, இனி யான் செல் வேன்,' என்னும் தமது கருத்தைப் பெருமிதத்துடன் கூறிவிட்டுத் தமது பகட்டின் மீதிவர்ந்து சென்றார்,

காவல் மரமென்பது, பண்டைக் காலத்துத் தமிழ்