பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇 நல்லிசைப் புலவர்கள்

முடித்தனர். சாத்தனரும் தம் மனேவியிடத்துக் காதற் கிழமை மிகுந்து, மகிழ்வுற்று, இல்லறச்சகடத்தை இனி தாகச் செலுத்தினர்.

இங்ங்னம் சிலவாண்டுகள் கழிந்த பின்னர், புலவர் களே அணுகிப் புடமிட்டு அவர்களது பொங்கொளியை எங்கும் பரப்பும் வறுமையென்னும் டெருந்தி, இச்செக் தமிழ்ச் செல்வரையும் திண்டிற்று. இத்தன்மைத்தான்் வறுமை மிக்க காலத்தும், புலவர் தமது செம்மையிற் குன்ருதும், குன்று போலத் துளங்காதும் கின்றனர். நாளுக்கு நாள் கல்குரவு மிகுதலால், புலவரது தமிழகம் உண்டற்குரிய பண்டங்கள் இலதாகி, அடுப்புச் சமைத் தல் தொழிலை மறந்து, காளான் பூக்கத் தொடங்கிற்று. மனேவியும் மக்களும் சொல்லவொண் ணுத் துன்பத்துட் சுழன்றார்கள்.

புலவர் இவற்றையெல்லாங் கண்டு கவன்று, 'கல் விச் செல்வம் டொன் மலரையொக்கும் ; பொருட்செல் வம் அதன் கறிய வாசனையையொக்கும்; ஆகையால், கல்வியுடைமையோடு பொருளுடைமையும் இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாததன்ருே அதனிடத்து நாம் கருத்துச் செலுத்தாமையானன்ருே, இங்ங்னம் நம்மை இன்மைப் பிணி இறுகப் பிணித்தது ' என்று தம்முள் எண்ணி, அப்பொருளைப் பெறுவதற்குச் செல் வர்க்கே ஈந்து சிறப்புச் செய்யும் மாந்தரிடம் செல்லாது, புலவர் பெருமக்களது கல்வியறிவின் மீக்கூர்வை உணர்ந்து அவர்களே மதிக்கும் ஒண்மையும் வண்மையு முடைய அரசர்கள், செல்வர்கள், வள்ளல்கள்பாற் சென்று, அவர்தம் உண்மைக் குணங்களை உள்ளபடி தீக் தமிழ்ச் செய்யுளாற்பாடிப் பெறும் பரிசில் வாழ்க்கை யையே கைக்கொள்ளக் கருத்துக் கொண்டார்.