பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தளுக் 总

புலவர் காலத்தில் சோழ நாட்டு அரசியல் உரிமை பற்றி கடந்த போரில் நெடுங்கின் வளி என்னும் சோழன் காரியாற்றில் துஞ்சிய பிறகு, அவன் மகன் கோப்பெரு தற்கிள்ளி உறையூரில் முடிசூட முயல, அதுபற்றிப் புகார்ச் சோழர்க்கும் உறையூர்ச் சோழர்க்கும் பெரும் போர்கள் பல முறை கடந்து, சோழநாடு குழப்பத்துட் பட்டிருந்தது. அதல்ை, புலவர் தம் காட்டு அவ்வரசர்களி டம் செல்லுதற்கியலாது, சேரநாட்டின் ஒரு பகுதியான கொங்கு நாடுகோக்கிப் பரிசில் காரணமாகப் புறப்பட்டு வருவாராயினர். வரும்வழியில் இவரைப்போல வறுமை யால் வருந்திப் பின்னர் முதிர மலைத் தலைவனும் பெருங் கொடையாளனுமாகிய குமணன் என்னும் அரசனே அடைந்து பாடி அவற்ைகொடுக்கப்பட்ட களிற்றின் மீதேறிப் பெருஞ்செல்வத்துடன் வரும் பெருஞ்சித்திர ஒர் என்னும் புலவர் எதிர்ப்பட்டனர். எதிர்ப்பட்ட பெருஞ்சித்திரனரைப் புலவர் நன்கறிந்தவராகலின், உவகையுடன் உற்று நோக்கி கின்றார், பெருஞ்சித்திர ஞரும் சாத்தைைரக் கண்ட அளவில் யானேயினின்றும் இறங்கிப் புலவரை அணுகி, இரு கரங்களேயும் பற்றிக் கொண்டு, “உழுவலன்புடைய புலவீர், தும் கலிவிற்குக் காரணம் யாதோ?’ என வினவப் புலவர் தமது இன் மைத் துன்பத்தையெல்லாம் கூறினர். பின்பு பெருஞ் சித்திரனுர், கண்பீர், கவலற்க முதிரமலைக்குரியவன் முதிர்ந்த கல்வியுடையவன்; பாவாணர் மிடிக்குப் பகை வன்; புலவர்க்குப் பொன்னும் களிறும் வரையாதளிக் கும் வள்ளல்; குமணன் என்னும் பெயருடையான். அவன்பாற் செல்லுமின். இன்னே தும் வறுமை கோய் கலே யப்பெறுவீர், யான் பெற்ற இப்பெருஞ்செல்வமெல் லாம் அவன் மனமுவந்தளித்தவையாம்,' என்று தாம்