பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் #35

முன்னர் உருப்பெற்று கிற்கின்றார்கள். இதுவன்ருே கல்விசைப் புலவர் திறப்பாடு!

  • முதிர மலேயில் ஆண் குரங்கு தனக்குக் கிடைத்த பலாப் பழத்தைத் தன்னுடன் கூடி உண்ணுதற்குத் தனது பெண் குரங்கை அன்புடன் கையாற் குறி செய் தழைக்கும், என்று குமணனது மலே வாழ் விலங்கின் இயற்கை கூறி, அதனடியாகத் தன்னே விரும்பி வரும் பல்லோரையும் அழைத்துத் தனது செல்வத்தின் பயனே அருத்தும் அவனது வேளாண்மைக் குணத்தைப் புலப் படுத்தியிருப்பதும், மற்ருேளி-த்துப் பழந்துரங்கு முதிரத்துக் கிழவன் என்று மலையின் பயப்பாடுணர்த்தி அதனால் அதற்குரிய குமணனது பயப்பாடும் உணர்த்தி யிருப்பதும் எத்துணேச் சுவையூட்டும் ஈயப்பாடுடை யனவாயிருக்கின்றன குமணன் கொடுத்த களிற்றைக் கொணர்ந்து, கடிமரத்துப் பிணித்து, இளவெளிமான நோக்கிக் கூறிய பாட்டு, பெருமிதச் சுவை மிகுந்து மிளிர்கின்றது. புலவர் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையாட்குச் சொல்லிய பாடல் கருணைச் சுவை கனிந்து ஒளிர்கின்றது. இப்புலவரது பத்துப் பாடல்களிலும் பத்தொன்பது உவம்ைகள் காணப்படு கின்றன: உருவகம் ஒன்றுள்ளது. இவற்றின்கண் கூறப் பட்டுள்ள உவமைகள் எல்லாம் மிகப் பொருத்தமும் சுவையுமுடையனவாயிருக்கின்றன. முதிய வளி ன் கரை மயிருக்கு நூலேயும், குரங்கின் தலே மயிருக்குப் பஞ்சினையும், யானையின் பெரிய கைக்குப் பனையையும், பொன் வட்டில்களுக்கு காண்மீன்களையும் உவமையாகக் கூறியுள்ளார். மற்றும் கணவனேயிழந்த மகளிர் மார் பிற் புடைத்தலால் கைகளினின்றும் உடைந்து உதிரும் வளே முறிகளுக்கு வாழைப் பூக்கள் உதிர்தலையும், பசி