பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிசாந்தையார் 123

யின், அழகிய உனது பெடையன்னம் பூணத்தக்க தில் து கல்ல அணிகலத்தை அளிப்பன்," என்னும் கருத்து விளங்க,

அன்னச் சேவல் ! அன்னச் சேவல் 1 ஆடுகோள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் மையன் மாலேயாங் கையறு பிணையக் குமசியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது. சோழநன் னுட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ, வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க, 'இரும்பிசிர் ஆந்தை அடியுறை,எனினே மாண்டதின் இன்புறு பேடை அணியத்தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. என்று கூறிச் சோழன்மீது தமக்குள்ள அன்பின் பெருக் கையும், சோழன் தமது பெயர் கூறக் கேட்ட மாத் திரத்திலேயே தம்மைக் கண்ணுற் கண்டாற்போல மகிழ்ந்து பெயர் கூறினவர்கட்கு வரிசை பல அளிக்கும் அவனது கட்பின் மாட்சியையும், அவனது காண்டம் கெளியனும் தன்மையையும், வண்மையையும் வெளி விட்டு வியந்தார்.

மற்றுமொருகால் அவர், "உம்முடைய இறைவன் யார்தான்ென்று கேட்பீராயின், எம்முடைய இறைவன் கோப்பெருஞ்சோழன் : அவன் பாணருடைய பசிப் பகையை ஒட்டுதற்கு வளமிக்க சோழ நாட்டில் உறை யூரென்னும் பாடி வீட்டில் குற்றமற்ற கட்பினேயுடைய