பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? நல்லிசைப் புலவர்கள்

பிசிராந்தையார் என்று வழங்கினர். (ஆர்.சிறப்பு விகுதி புலவர்க்குரிய ஆந்தையார் என்னும் இம் பெயரை, ஆசிரியர் தொல்காப்பியனுர்,

ஆதனும் பூதனும் கூறிய வியல் பொடு பெயசொற் றகரந் துவக் கேடுமே.”*

என்று கூறியுள்ள இச்சிறப்புவீதிச் சூத்திரத்தால், ஆதன்+தந்தை=ஆங்தை என வந்தது எனக் கூறுவாரு முளர். இச்சூத்திரத்தால், ஆதன் என்னும் இயற் பெயர் முன், தந்தை என்னும் முறைப் பெயர் வரு மொழியாக வந்து முடியுமிடத்து, ஒரோவழி இங்ங்ணம் புணருமென்பதே ஆசிரியர் கருத்தன்றி, இங்ஙனம் புணர்ந்தமையான் விகாரமடையும் இப்பெயர் ஒரு வர்க்கு இயற்பெயராய் வழங்குமென்பது ஆசிரியர் கருத்தென்று பெறப்படாமையானும், அங்கனம் பெறப் படினும், அஃது ஏனையோர் பெயர்க்கு ஒக்குமேனும், இப்புலவர் போன்ற புலவர் பெருமக்களுக்குச் சிறிதும் ஒவ்வாதாகலானும், இப்புலவரின் இப்பெயர்க்கு இங்க னம் காரணம் கூறுதல் பொருந்தாததாகவே தோன்று கின்றது. சாமானியர் குழுவினுள்ளும் தங்தையைக் கொண்டே மகன் விசேடிக்கப்படுதல் பெருவழக்கா யிருப்பவும், இக்கல்லிசைப்புலவர். மகனேக்கொண்டு விசேடிக்கப்பட்டார் என்கை எங்ங்ணம் பொருந்தும்: தந்தையினும் சதமடங்கு தனயன் புலமை படைத் தவனெனின், அவனது பெயர்கொண்டு தங்தை விசேடிக்கப்படுதல் ஒருவாறு பொருந்துவதாகும். கம் ஆங்தையார், கல்லிசைப் புலவர் குழாத்துள் பல்லிசை நிறுத்தும் புலமை மிக்குடையராயும், பிற்காலத்து கச்சி

2. தொல்-எழுத் கு. 4ே8