பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 155

ஆகாயத்தினும், திசையின்கண்ணும் இருளுமுளதோ: பாரத்தின் மிகுதியால் கிலத்தின் கண் பதிந்த சகடத்தின் ஆழ்ச்சியைப் போக்குதற்கு மணற்பாக்கவும் கற்பிளக் கவும் நடக்க வல்ல மனச் செருக்குடைய கடாவிற்குப் போதற்கரிய துறையுமுண்டோ ? இல்லையன்ருே? அவை போல, நீ போர்க்களம் புகுந்தால், இவ்வுலகத்தில் உனது காட்டைக் கவர்ந்து ஆரவாரிக்கும் வீரரும் உள ரோ?” என்று கூறினர்.

இது கேட்ட அஞ்சி, போர் விருப்புற்று, அஞ்சாது பகைவரை ஒட்டுதற்கு மதிற்புறத்துப் போர்க்களம் புகுந்து, விழித்த கண் இமையாது வீர ரேமொடு போர் உடற்றின்ை. அப்போது பகைவர் விடுத்த படைகள் பல அதியமானது மார்பினும், கழுத்தினும், முகத்தி லும் பட்டுப் புண்படுத்தின : அவ்வமயத்தும் ஒளவை யார் அதியமான் முன் சென்று, பெருந்தகாய், பெருஞ் சமர் புரிந்து நீ விழுப்புண் பட்டபடியால், உன்னேடு எதிர்த்த அரசர் பலர், யுத்தத்தில் இறவாமையால் உள தாகும் குற்றம் நீங்கும்படி பிற்காலத்தில் கோயால் இறக்க தமதுடம்பைத் தருப்பையைப் பரப்பிக் கிடத்தி வானாற்பிளந்து அடக்கம் செய்தலினின்றும் தப்பித்த வர்களாய், இப்போது உன் வாட்போரில் பலர் மாண்ட னர். இனி வருந்திப்போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது?’ என்று பின்னரும் அவனே ஊக்கினர்,

அதியமான், அப்புண்பட்ட கிலேயினும் தளராது. போர் புரிந்தான்் : இறுதியில் பெருஞ்சேரல் விடுத்த வேலொன்று காற்றினுங் கூற்றினுங் கடுகி வந்து, அதி பமான் அஞ்சியின் நெஞ்சிற்பாய்ந்து, ஊடுருவிச் சென் றது. அதனல், அதியமான் சோர்ந்து தேரிற்சாய்ந்து உயிர் துறந்தான்். அந்தோ! அவ்வமயத்து அவனது