பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖等 நல்லிசைப் புலவர்கள்

என்பது தமிழ் மறையின் முறையன்ருே? செல்வமோ, இன்றொருவரிடமும், காளே வேறொருவரிடமும் கிலே யின்றி மாறிமாறிச் சகடக்கால்போலச் சுழன்று வரும் தன்மையுடையது; இது பற்றி உலகமுள்ளளவும் நீங்கா வசையை யான் அடைதல் தகவுடையதாமோ? உன் தல பெறுதல் எனக்கு இன் றியமையாததாயின், யான் அதனை வேண்டும் போது தெரிவிப்பேன்; அவ்வமயம் தருவாயாக அங்காள்காறும் அதனை குறிக்கொண்டு காத்தல் வேண்டும்; இங்ங்ணம் அதனைக் காத்திடுவதற்கு ஒருப்படுவையாயின், அதுவே கின்பால் யான் பெற்ற பெரும்பரிசிலாகும்,' என்று கூறிப் பின்னரும் அவனே கோக்கி, இரந்தோர்க்குக் கரவாது தம் கைப்பொருள் களைச் சால ஈத்துவந்த கடையெழு வள்ளல்கள் இப் போது இறவா திருப்பரேல், அவர் புகழெல்லாம் கின் புகழ்முன் இரவி.முன் மின்மினியாகுமன்ருே தன்னே வந்தடைந்தோரது இன்னலே நீக்குதற்குத் தன்னேயே கல்கிடத்துணிந்த சினது அருளின் திறத்தை நோக்கின், தேவர்கோனுக்கு அன்புடன் தன் என்பினை ஈந்த ததீசி முனிவரன்றி, உன்னையொப்பார் வேறு யாவருளர்?" என்று அவனது ஒப்பற்ற உயிர்க்கொடையை வாயார மனமாரப் புகழ்ந்து கூறிவிட்டு, 'இவ்வாளோடு சென்று, குமணன் பெருங்குனங்களே இளங்குமன னுக்கு எடுத்துக் காட்டி, எவ்வாற்ருலேனும் இருவரை யும் கட்பாக்குவித்துக் குமணனை முன்னேய அரசு கிலேயில் நிறுவுவேன் ' எனத் தம்முள் அறுதியிட்டுத் தமது வறுமைத்துன்பத்தையும் அறவே மறந்து, இவ் வரும்பெருங்காரியத்தை முடிப்பதற்கு முனேக்தெழுந்து, குமணனை கோக்கி, ‘அரசே, சின்னுட்களுக்குள் கின்னே யான் வந்து காண்பேன்," என்று கூறி, விடை பெற்றுக்