பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓋 நல்லிசைப் புலவர்கள்

செய்யுளடிகளும் முறையே புலப்படுத்தும். அதியமான் தகடூரிலிருந்தவனென்பதும், சேரர் உறவினன் என்ப தும், ஒளவையார் பாணர் மரபினர் என்பதும் வரலாறி றுள் முன்னரே குறிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் ஆராய, இடத்தான்ும் குலத்தான்ும் வேற்றுமை மீகன், முடையாகத் தொன்னூற்சான்றுகொண்டு அறியப் படும் கபிலர், அதியமான், வள்ளுவர் என்போரையும் : பண்டை நூல்களால் அறியப்படாத வள்ளி, முதுவை, இலுப்பை என்போரையும் ஒளவையாருடன் பிறந்தோ ராகக் கொண்டு, பெற்ருேர் யாளிதத்தன்' எனவும், 'ஆதப்புலேச்சி' எனவும், ஆதி எனவும், பகவன் என வும் ஒன்றற்கொன்று முரணுய்ப் பலபடியாய்க் கூறும் கதையனேத்தையும் புனேந்துரை எனத் துணிந்து ஒதுக் குவதே தக்கதாகும். ஆகவே, இவர் பெற்ருேர் இவ ரெனத் துணிதற்குச் சான்றில்லை எனக் கொள்வதே (జీ.ఓ.

குலம் : இவர் பிறந்த குலம் பண்டைக் காலத்தில் கல்வி கேள்விகளிற்சிறந்து, சுவை பயக்குஞ் செய்யுள் செய்தலிலும், ஆடுதலிலும், பண்ணுெடு பாடுதலிலும், வேந்தர்க்குத் தாது செல்லுதலிலும் சிறந்து விளங்கிய பாணர் குலமென்பதற்கு, இவரே, மடவர லுண்கண் வாணுதல் விறலி பொருநரு முளரோதும் மகன்ற& காட்டு ’ (புறம். 89) என வேற்று வேந்தன் தம்மை கோக்கிக் கூறுவதாகக் கூறிய பகுதியினுள் பாணர் குடியின் பெண்பாற் பெயர்களாகிய பாடினி, பாட்டி, விறலி என்பவற்றுள் விறலி’ என்ற பெயரால் தம்மை விளித்ததாகக் குறித்திருப்பதும்; 890-ஆம் புறப்பாட் டில் இவரே, 'மாடஞ் சிலம்பவென் அரிக்குரற் றடாரி

1. விறலியர்.விறல்பட ஆடலும் பாடலும் வல்லவர்.