பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 175

இம் இனத்தவராய பெண் மக்களது கற்பின் பெரு மையை உலகில் மேம்படுத்துங் கருத்துப் பெரிதும் உடையராயிருந்தவர் என்பது உணரப்படும். அதியமான் கோவலூர் எறிந்ததனைப் பரணர் பாடியதையும், மூவேந்தரும் பாரியை வெல்லக் கருதிச் சேன்களுடன் அவனது பறம்பு மலையைச் சூழ்ந்து, புகல் போக்கின் வித் தடுத்து கின்ற காலத்து, வளர்த்த கிளிகளால் கெம் கதிரைப் புறத்திருந்து கொணரச் செய்து, குடி படை களே உண்பித்துக் காத்த கபிலர் செய்தியையும், தேவ ருலகினின்றும் கரும்பைக் கொணர்ந்து தமிழ் காட்டிற் களித்த அதியமானஞ்சியின் முன்னேர் செய்கையையும் இவர் தமது அகப்பாட்டிலும் புறப்பாட்டிலும் முறையே குறித்திருப்பதை கோக்குமிடத்து, இவர் புலவர்களிடத்துப் பேரன்பு வாய்ந்தவரென்பதும், வர லாற்றினே அழியாது போற்றி வைக்கும் இயல்புடையா ரென்பதும் பெறப்படும்.

"ஈண்டிய பல்புகழ்ப் பாண்டியர் பலரும், திருத்தகு கேள்வி உருத்திர சன்மரும், வான்ருேய் நல்லிசைச் சான் ருேர் பிறரும், மேம்படுத்தேத்தும் தேம்படு கல்விக் க. லாய் விளங்கிய இவ்வருந்தமிழ்ச் செல்வியாரின் திருக் திய புலமையின் பெருமையையும், ஏனையவற்றையும் யாமே எடுத்துச் சொல்லுங் திறமையுடையேம் !

பாடப்பட்டோர் : இவராற் பாடப்பட்டோர் அதியமான் நெடுமானஞ்சி, தொண்டைமான், அதிய மான் மகன் பொகுட்டெழினி, காஞ்சில் வள்ளுவன்,சேர மான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, ஏழிற்கோ என்போர்.

.ே இவனேயே கன்னன் எனக் கருதுவர் ஒரு சாரார்.