பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 off நல்லிசைப் புலவர்கள்

காலம் : இவர் பாடிய அதியமான் அஞ்சியைப் பரணரும் பாடினரென இவரே கூறுதலால், பரணர் இவர் காலத்தினர். பரணர், கி. பி. 55-60க்கு முன் இருந்தவனென்று கருதப்படும் உருவப்பஃறேர் இளஞ் சேட்சென்னி முதலிய பல அரசர்களைப் பாடியுள்ள ரென்பது முன்னரே காட்டப்பட்டது. ஒளவையார் இரண்டாம் நூற்ருண்டின் இறுதிக் காலத்திலிருக்க உக்கிரப் பெருவழுதியையும் பாடியுள்ளார். இவன் கடைச் சங்கத்திறுதியிலிருந்தவனென்பது இறைய ஞர் களவியலுரைப் பாயிரம் முதலியவற்ருல் தெளியப் பட்டது. இவைகளை ஆராயின், ஒளவையார் பரண ருக்குச் சிறிது இளைஞராய், கி. பி. 85-?0 முதல் கி. பி. 190 வரை நீண்ட ஆயுளுடையவராய் வாழ்ந்திருந்தவ ரென்று கொள்வது பொருந்துவதாகும்.

இவரே, 9-10 ஆம் நூற்ருண்டுகட்கிடையிலிருந்த

ர்களான கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி முதலிய புலவர்கள் காலத்தும், சேரமான் பெருமாள் யஞர் காலத்தும் வாழ்ந்திருந்தாரென்று கொண்டு, இவர் பெயரால் பல வரலாறுகளும் பாட்டுக்களும் வழங்கு வது உலகவியற்கைக்கு மாருனதாகையால், கொள்ளத் தக்கதாகத் தோன்றவில்லை.

பாட்டுக்கள் :

இவருடைய பாட்டுக்கள், எட்டுத் தொகையுள் புறகானூறு, அகநானூறு, கற்றிணை, குறுந்தொகை என்னும் கான்கு நூலுள்ளும் காணப்படுகின்றன.

புறநானூற்றில், 87-104, 140, 187, 308, 231, 282, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 393 என்னும் எண்ணமைந்த முப்பத்து மூன்று பாடல் களும் ஒளவையார் பாடியனவாகும். இவற்றிற் கூ கப்