பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் :

படும் பொருள் புறப்பொருள் என்பது சொல்ல வேண் டா. 87-ஆம் பாட்டு முதல் 95-ஆம் பாட்டு வரையுள்ள ஒன்பது பாட்டுக்களும், 97-ஆம் பாட்டு முதல் 101-ஆம் எட்டுவரையுள்ள ஐந்து பாட்டுக்களும், 108, 104, 306, 231, 232, 235, 315, 390 என்னும் எண்ணமைந்த எட் டுப் பாட்டுக்களும் இவர் அதியமான் நெடுமானஞ்சி யைப் பாடியனவாகும். ேே, 103, 892 எண்ணமைந்த மூன்று பாடல்களும் இவர் அதியமான் நெடுமானஞ்சி யின் தவப் புதல்வன் பொகுட்டெழினியைப் பாடியன வாகும். காஞ்சில் வள்ளுவனப் பாடியது, 140ஆம் பாட்டு. இராச சூய.வேள்வியில் பெருகற்கிள்ளி, சேர மான்மாவெண்கோ, கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி இம்மூவரையும் வாழ்த்தியது, ேே?-ஆம் பாட்டு. ஏனைய பாட்டுக்கள் இன்னுரைப் பாடியன எனத் தெரிந்துகொள்ளுதற்கு ஆதாரமின்மையால், அறிய இயலவில்லை. .

இவர் இப்பாடல்களுட்கூறும் உவமைகள் நயமிக் கவை; அதியமான், ஆர்வலர்க்கு இனியனுப் எளியணுய்ப் பகைவர்க்கு இன்ளுைய் அரியய்ை இருக்குக் தன்மைக்கு ஊர்ச் சிறுவர்கள் தன்னுடைய தந்தத்தைக் கழுவுதல் காரணமாக நீர்த்துறையில் படியும் களிற்றையும், அது மதம் பட்ட கிலேயையும் முறையே உவமையாகக் கூறி வைத்துள்ளார். அதியமானது போர்த் தொழில் விரை வும் திண்மையும் விளங்குதற்கு, வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னன், எனக் கூறிய உவமை வியப்பை விளேக்கும். குன்றத் தன்ன யானை எனவும்: பால்புரை பிறை' எனவும் ; தேட் கடுப்பன்ன தேறல் எனவும்; முழவுத்தோள்' என வும்: அரவி னன்ன மள்ளர் எனவும் உவமை கூறி

12.