பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18th நல்லிசைப் புலவர்கள்

என்பார்து வாய்மையைச் சிறப்பித்துள்ளார். இங்க னமே இந்நூலுள் 73-ஆம் பாடலில் ஒன்றுமொழிக் கோசர் போல” என வந்துள்ளமை காண்க. 80-ஆம் பாட்டில் அதியமானது படைப்பெருமையையும் 91-ஆம் பாட்டில் அவனது வள்ளன்மையையும், வெ.தி. றித் திறத்தையும் பாராட்டிக் கூறியுள்ளார்.

இவைகளின்று உரையாசிரியர்களால் இவருடை. பாட்டுக்களென்று எடுத்துக் காட்டப்பட்டனவாகிய "இருமர் மணிவிளக்கத்து' என்ற செய்யுளும், கல் லம்பர் நல்ல குடியுடைத்து," என்ற செய்யுளும் "உடையராய்ச் சென்றக்கால்," என்ற செய்யுளும், தொண்டை மண்டல சதகம் குறித்த "வேழமுடைத்து மலேகாடு', 'வஞ்சி வெளிய குருகெல்லாம்," என்ற செய் யுட்களும் இவர் பாடியனவே. மூவர் கோவையும்,' என்ற செய்யுளின் கடையும் சொற்களின் பிரயோகமும் பழைய பாட்டுக்களிற்போலவே காணப்படுகின்றமை யின், அதனே இவர் பாட்டெனக் கொள்ளல் தகும்.

இவைகளன்றி இக்காலத்து இவர் பெயரால் வழங்கப்படும் தனிப்பாடல்களும், நல்வழி மூதுரை முதலிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டனவே எனத் துணிதற்கு அவைகளிற் காணப்படும் சொற்க ளின் பிரயோகங்களும் நடையின் போக்கும் தடையா யிருக்கின்றன. இன்னும் இவருடைய பாடல்களின் சொன்னயம் பொருணயங்களையும், உவமை இயங்களே யும். ஏனேய அழகுகளேயும் ஆராயப் புகின், அளவின் றிப் பெருகும். -

1. இப்புத்தகம் 110 ஆம் பக்கம் பார்க்க.