பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 நல்லிசைப் புலவர்கள்

வானரர் தலைவனுகிய சுக்கிரீவன், தன் உரிமை மனேவி உருமையைக் கவர்ந்துகொண்டு தன்னே ஓட்டிவிட்ட தன் தமையனும் வாலியைத் தாசாதி அம்பால் எய்து வீழ்த்திய காலத்து மனேவியைக் கவர்ந்த வஞ்சகனென் பதையும் கெஞ்சத்திற்கொள்ளாது அவனது உடலேத் தழுவிப் புரண்டு ஓலமிட்டழுததை அறியாதார் யார் : ஈருடலும் ஒருயிருமாக இருத்தற்குரிய நீங்கள்,இங்ங்னம் உள்ளம் பிளவு பட்டிருப்பீர்களாயின், அது பிறரால் எள்ளி கையாடற்கேதுவாகுமன்ருே ' என்று இவ் வுறுதிப் பொருளாகிய தெள்ளமுதத்தைத் தீஞ்சுவை யொழுகும் சொற்குழுவாகிய வலம்புரி சங்கால் எடுத்துப் புகட்டினர்.

இவ்வமிழ்தம் இளங்குமணனது செவிவாய்ச் சென்று உள்ளத்திற்சேர்தலும், அங்குக் குடிகொண்டி ருந்த வஞ்சமென்னும் நஞ்சமகன்று, சகோதர வாஞ்சை யென்னும் வெள்ளம் ததும்பிற்று. உடனே இளங்கும ணன் தன் தமையனுக்குத்தான்் இழைத்த தீங்கையெல் லாம் கினேந்து கினைந்து இரங்கி, அங்தோ! என் செய் தேன் பாவியேன்!” என்று பலவாறு புலம்பி, காவீறு படைத்தகாவலர் பெருமான நோக்கி, பாவப் படுகுழி யில் வீழ்ந்த பதடியைக் கைதுாக்கி உய்விக்க வந்த கருணை வாரிதியே, என் அண்ணலே அழைத்து வந்து, அரியணையிலமர்ந்து மறுபடியும் செங்கோலோச்சுமாறு புரிவது நும் கடமையாகும் துஞ்சரணையே செஞ்சரணு கக் கொண்டேன்!” என வேண்டி யின்ருன். தம் அறி வின் மாட்சியானும், சொல் வன்மையானும் உலக இயற் கையையே ஒரு கணத்தில் மாற்றத்தக்க ஆற்றல் படைத்த பெரியோர் முனைந்து நின்று செய்யப் புகுந்த இப்பெற்றியவான கருமங்கள் இடைமுரிந்து வீழ்ந்து படுதலுமுண்டோ?