பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நல்லிசைப் புலவர்கள்

சையை உண்டாக்கிக் காடு பற்றியிருந்த குமணனைப் பழைய அரசியலில் நிறுவும் தொழிற்கண் முனைந்து கின்று, வறுமைத் துன்பத்தால் தாம் பரிசில் பெற வந்த காரியத்தையும் அறவே மறந்து கின்றனரென்றால், இவ சது அன்பு, அருள், வாய்மை, தூய்மை முதலான அருங்குணங்களையும், மேற்கொண்ட காரியத்தைக் கடைத்தேறக் கொண்டுய்க்கும் வினைச்செயல் வை கையின் திட்ட ஒட்பங்களேயும் நம் வாய்ச்சொற்கொண்டு அளக் துரைத்தலாமோ ?

காலம் : இவர் பாடிய குமணனைப் பெருஞ்சித் திரனர் என்னும் புலவரும் பாடியிருத்தலான், இரு வரும் ஒரு காலத்தவர் என்பது வெளிப்படை. இப் பெருஞ்சித்திரளுர் கடையெழு வள்ளல்களுள் பிற்பட் டிருந்தவனகிய அதிகமான் நெடுமானஞ்சியைப் பாடி யிருத்தலால், இப்புலவர் கடையெழு வள்ளல்களின் இறுதிக் காலத்திருந்தவரென்பது பெறப்படும்,

இவர் தந்தையார் மூலங்கிழார், பாண்டியன் இல வந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனேயும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவனேயும் பாடியிருத் தலால், இப்புலவர் அவ்வரசர் காலத்தின் பிற்பகுதியி னும்; அவ்வரசர்களுள் கிள்ளிவளவனேப் பாடிய ஆலத் தூர் கிழார், கோவூர் கிழார், இடைக்காடனர், ஐயூர் முடவர்ை, கல்லிறையனர் ஆடுதுறை மாசாத்தனர், எருக்காட்டுர்த் தாயங்கண்ணணுர், மாருேக்கத்து கப்பச ஆலயார்,கன் மாறனேப் பாடிய மதுரை மருதனிளநாகனுர், நக்கீரனர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர், வடமவண்ணக்கன் பேரிசாத்தனர் என்ற புலவர் காலத் திலும் இவர்களுள் சிலருக்குப் பின்னரும் இருந் தோராவர்.