பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 3?

தழைத்து, இன்னுரை வழங்கி உபசரித்து, வரிசைகள் பல அளித்து, அவரது கட்டை நாடி நின்முன். அங்கள் னமே புலவரது உள்ளத்தை அச்சேரன் அருங்குனங் கள் இறுகப் பிணித்தமையான், இருவரகத்திலும் கண் பென்னும் பண்பு வளர்ந்தது. புலவரைச் சேரமான் தன் அவைக்களத்துச் சின்னுள் வீற்றிருந்து தனக்குச் செங் தமிழ்க் கவியமுதருத்த வேண்டும் என்று அருத்தியுடன் தன் கருத்தை வெளிப்படுத்தி வேண்டினன். புலவரும் அதற்கிணங்கி, அவளுேடு அவைக்களத்தில் அமர்ந்து, காட்கவி பாடியும், அரிய பொருளுரைகளே எடுத்துரைத் தும் அவனே மகிழ்வித்துவருவாராயினர். இங்ஙனம் புல வர் அரசனோடு மருவியுறைந்து வருங்கால், ஒரு நாள் புல வரும் அரசனும் அங்ககளின் மதிற்புறத்துச் சிறந்து விளங் கும் வேண்மாடம் என்னும் மாளிகையின் உப்பரிகை யில் அமர்ந்து, தன்னேரில்லாத் தனித் தமிழின் சிறப் பியல்புகளை எடுத்துப் பாராட்டி, உரையாடி மகிழ்ந்து, இனிதாகப் பொழுது போக்கிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் இங்ங்னம் இருக்குங்கால், புலவர்க்குப் பழைய நண்பனுகிய உறையூர்ச் சோழன் மூடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி தனது உறையூர்ப்புறத்தெல்லே யில் களிறுார்ந்து வர, அது திடீரென மதம்பட்டுச் சோழ ணுக்குத் துணையாய் வந்த வாள் மறவரும் பாகரும் தம் வலியால் வேண்டுவன செய்து தடுக்கவும் அவற்றை யெல்லாம் மதியாது கையிகந்து, வாள் மறவர் புறத்தில் சூழ்ந்து ஓடி வர விரைவாய் வந்து கருவூர் எல்லேயை அணுகிச் சேரனும் புலவரும் இருந்த வேண்மாடத்துக் குச் சிறிது தாரத்தில் நெருங்கிற்று. இங்ங்ணம் வாளுங் கையுமாய் ஓடி வரும் மறவர்களையும், யானையையும், அதன்மீதிருக்கும் அரசனேயும் வேண்மாடத்திருந்தபடியே