பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 55

திறங்களால் இவர் நட்பின் கெழுதகைமைக்கே ஒருபேரி லக்காய்த் திகழ்ந்தவரென்னலாம். ஆயின் அறஞ்செய் கருத்தை விரித்துரைத்திருப்பது கொண்டு, இவரது தரும குண இயல்புகள் இத்தன்மையவாமென அறியப் படும். இவர் உலக இயற்கை வனப்பின் திறங்களே ஊன்றி நோக்கி இன்புறும் பெற்றியுடையாரென்பது, காடுகளையும், மலைகளையும், ஏனையவற்றையும் இவர் வருணித்துச் செல்வதிலிருந்து தெளியப்படுகின்றது. கம் புலவர் சிகாமணியாகிய மோசியாருக்குச் சிறிது பிற்கா லத்திருந்த பெருஞ்சித்திானுர் என்னும் கல்விசைப் புல வர் குமணனைப் பாடிய 158-ஆம்ப்றப்பாட்டில் ஆயைப் புகழுமிடத்து, மோசி பாடிய ஆயும் என, ஆயின் புகழ் மேன்மைக்கு மோசியாற்பாடப்பெற்றதே பெருஞ் சான்றாம் என்பது படக் கிளந்து கூறி, இவரது வாய் கொண்டு பாடப்பெறுதலிலுள்ள அருமை பெருமை களே வியந்தனரென்றால், மன்னரும் புலவரும் போற்றும் இவரது அறிவு குணம் முதலியவற்றின் பெருமைகளே நாம் விரித்துரைப்பது எங்ங்ணம் !

காலம் : இவர் சோழன் முடித்தலைக் கோப்பெரு கற்கிள்ளி, சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை, வேள் ஆய் எனும் மூவரையும் பாடியிருத்தலான், இவ் வரசர்களது காலமே இப்புலவரது காலமுமாகும். இவர் களுள் சேரமான் அந்துவஞ்சேரவிரும்பொறையென் பான், பதிற்றுப் பத்து ?-ஆம் பத்துக்குரிய செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் தந்தையென்பது, அப்பத் தின் பதிகத்தால் அறியப்படுகின்றது. அச்செல்வக் கடுங்கோவை அ வ் வே மு 1 ம் பத்தாலும் எட்டாம் புறப் பாட்டாலும் பாடியவர் கபிலர். கபிலர் இவனேட் பாடிய காலத்தில் மிக முதியவராய் இருந்தவரா