பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நல்லிசைப் புலவர்கள்

தல் வேண்டுமென்பது வேறு காரணங்களால்: அறியப் படுகிறது. அங்கனமாகவே, மோசியாரும், கபிலரும், கபிலர் தோழரும் ஆயைப் பாடியவருமாகிய பாண ரும் ஒரு காலத்தவராதல் பெறப்படும். கபில பரணரது காலம் கி.பி. 80 முதல், கி.பி. 150 வரை என்று சிலப் பதிகாரம், பதிற்றுப் பத்து முதலிய தொன்னூல் களின் தக்க சான்று கொண்டு கிறுவப்படுமாகலான், கம் மோசியாரது காலமும் அஃதேயாதல் அமையும்.

இவர் காலம் இதுவாகக் கொள்ளுதற்கு மற்றொரு சான்றும் உளது : கிறிஸ்து பிறந்த நூற்று முப்பத் தொன்பதாம் ஆண்டிலிருந்த தாலமி (Ptolemy) என் னும் மேற்றிசையவசிைரியர் நம் பரத கண்டம் முழு தும் யாத்திரை செய்து, அக்காலத்துப் பூமியினியல்பு களையும், அரசியல் கிலேகளையும் பற்றித்தாமெழுதியுள்ள பூகோளநுாலில் தென்னட்டு வரலாறுகளையும், தமிழ் நாடு கிரேக்க தேசத்தோடு செய்த வாணிகச் செய்தி களேயும், அவ்வாணிகங்கள் கடப்பதற்குச் சாதனமான தொண்டி, முசிறி, கொற்கை முதலிய துறைமுகப் பட் டினங்களையும் குறித்துள்ளார்; அப்பகுதியில் கம்மோசி யாரின் ஆருயிர் கண்பளுகிய ஆய்வேளது காட்டையும்,

1. கபிலர் தோழர் பரணர், கபிலரால் பாடப்பெற்ற செல்வக்கடுங்கோவுக்கு 40-50 ஆண்டுகட்கு முன்னிருந்த கரிகாலன் தங்தை முதலியோரைப் பாடியிருத்தல் முதலி # #öᎢ•

3. அகம். 198. 8. சிலப்பதிகார காலத்தைக் கோவூர் கிழார் கால ஆராய்ச்சியிற்காண்க. -

4. ஆய் ஆண்ட நாட்டின் எல்லேயை இக்காலத்து மலையாளத்திலுள்ள கோட்டயத்திலிருந்து கோட்டாறு, பொதியமலை வரையிலுங் கொண்டு முடிப்பர் சரித்திர அறிஞர்.