பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 59

மைகளே காணப்படுகின்றன. 18-ஆம் புறப்பாட்டில் வாளேந்திய மறவர்கள் புடை சூழ நடுவில் தலைமை தோன்ற விரைந்துவரும் மதயானைக்குச் சுரு மீன் பக்கத் தில் சூழ்ந்து வரக் கடல் நடுவிற் செல்லும் மரக்கலத்தை யும் பல விண் மீனுக்கு நடுவே செல்லும் மதியத்தையும் உவமையாகக் கூறியிருப்பது புலவரின் ஆற்றலேப் புலப் படுத்தி, மனக்கருத்துக்கு மிகவும் பொருந்துவதாய்ச் சிறந்து விளங்குகின்றது. இஃதன்றியும், வண்மைக்கு மழையையும், யாழின் கரிய கோட்டுக்குக் களாப்பழத் தையும், பனேயின் அரைக்கு மத்தளத்தையும், பனையின் மடலுக்கு அரத்தையும், விறலிக்குக் கலாப மயிலேயும், பரிசிலர் கொடையுடையாரிடத்துச்செல்லுதற்கு மேகம் கடலே நோக்கிச் செல்வதையும், பயன் உவமை, உரு உவமை, தொழில் உவமைகளாக அமைத்துள்ளார். இங்ஙனம் கூறும் உவமையன்றி, ஏனைய வடநூல் அணி கன் இவருடைய பாடல்களில் காணப்பெரு. இதனால், எத்திற மாந்தருளத்தும் இயல்பாகவே சுரக்தெழுவது உவமம் ஒன்றுமே என்பது கொண்டும், பிற்காலத்துப் பெருக்கிக்கொண்ட ஏனைய அணிகளெல்லாம் இதனடி யாகக் கிளேப்பனவென்பதறிந்தும், தமது தொல்காப்பி யப் பெரும்பனுவலுள் உவம இலக்கணம் ஒன்றுமே கூறிப்போந்த ஆசிரியர் ஒல்காப் பெருமைத் தொல்காப் பியனரின் ஆணே நெறி கடவாது கின்று பாடல் தரும் புலவரது உயரிய ஒழுகலாறு உய்த்துணரப்படும். இத்திறன், கல்லிசைப் புலவர் பாடலுக்கெல்லாம் ஒத்த தேயாம். 143-ஆம் புறப்பாட்டில், நரந்தை முதலிய புல்லே மேய்ந்த கவரிமா, குவளைப்பைஞ்சுனேயின் நீரை அருந்தி, அருகிலுள்ள தகர மரத்தினது நிழலில் தனது பெடையோடும் தங்குதற்கிடமான வானத் தொடும்