பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磁铬 நல்லிசைப் புலவர்கள்

வினை புனை நல்லில் இணைகூஉக் கேட்பவும், இன்கு தம்ம சங்கினி திருத்தல் : துன்னருத் துப்பின் வயமான் தோன்றல்: அறவை யாயின், நினதெனத் திறத்தல் : மறவை யாயின், போரொடு திறத்தல் : அறவையும் மறவையும் அல்லே யாகத் திறவா தடைத்த திண்ணிலேக் கதவின் நிண்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே!" என்னும் அருள் வெள்ளம் ததும்பும் பொருள் பொதிந்த பாடலேக் கூறினர். கூறலும், இஃது அவ னது உள்ளத்திற்சென்று பெருகிற்று. உடனே அர சன் அடைமதிலைத் திறந்து விட்டு, உறையூர் போய் அரண் செய்து, உள்ளிருந்தான்். கலங்கிள்ளி, ஆவூரைக் கைப்பற்றிக்கொண்டான்.

இங்ங்ணம் ஆவூர்க் கோட்டையை முற்றுகை செய்து கைப்பற்றியிருந்த சோழன் கலங்கிள்ளிபால், இளந்தத்தன் என்னும் பெயர் வாய்ந்த புலவரொருவர் வந்து, பரிசில் வேண்டிப் பெற்றுக்கொண்டு, பின்னர் உறையூர் போய் கெடுங்கிள்ளியை அடைந்து, பரிசில் வேண்டினர். அப்புலவரை நெடுங்கிள்ளி, இவன் உண்மைப் பரிசிலாளன் அல்லன் ; நம் பகைவனுகிய கலங்கிள்ளியிடமிருந்து இவ்விடத்து இரகசியங்களே அறிந்து போதற்கு வந்த ஒற்றனேயாவன்,” என்று பிழைபடக் கருதிப் புலவரைக் கொல்லுதற்குத் துணிந் தனன். இக்கொடுஞ்செயலேக் கேள்வியுற்ற புலவர் பெருந்தகையாம் கோவூர் கிழார், விரைந்து சென்று, புலவரை உயிர் இறுதியினின்றும் உய்விக்கக் கருதி, உறையூர் புகுந்து, அரசனேயணுகி, அரசே, இப்புல