பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோஆர் கிழார் 74

வைத்த பச்சை மண் திரள் போல, அவனது கருத்தின் முடிபையுடையதாயிருக்கின்றது . ஆகையால், காமெல் லாம் அவனேயே பாடுவோமாக , வாரீர் பரிசின்மாக் காள் !" என்று கூறுமுகத்தால், அவனது வரையா வள் ளன்மையையும் தலைமையையும் பாராட்டிக் கூறினர்.

மற்றுமொரு முறை, அவ்வரசன் சேர பாண்டிய சது காட்டைத் தன்னடிப்படுத்திய ஆற்றலேயும் பாண் டியனது ஏழ் அரண் கதவுகளே அழித்து அங்குத் தனது புலிக்கொடியைப் பொறித்த மிகுதிப்பாட்டை யும், போர்க்களத்தில் பாணர்க்கு உணவருத்துஞ் சிறப் பினேயும், அவனது அறக்கள வேள்வி மறக்களவேள்வி களையும் சிறக்கக் கூறினர் (புறம்-38), இங்ஙனம் புலவ ரும் கலங்கிள்ளியும் விள்ளா கட்புப் பூண்டு விளங்குகை யில், இக்கலங்கிள்ளியின் தமையனும் காவிரிப்பூம்பட்டி னத்தை அரசாண்டுகொண்டிருந்தவனுமான சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்பான், கடையெழு வள்ளல்களுள் ஒருவனும், திருக்கோவலூர் அரசனும், புலவர்க்குப்பரமோபகாரியும், கபிலர் முதலிய கல்லிசைப் புலவர்களால் நாவார மனமாரப் புகழ்ந்து பாடப்பட்டவனுமான மலேயமான் திருமுடிக்காரியின் மீது தான்் கொண்டிருந்த பகைமை காரணமாக அவ னது இ ள ைம மி க் க மக்களிருவரைக் கைப்பற்றிக் கொணர்ந்து, யானேயால் இடறும்படி செய்து கொல்லக் கருதின்ை. இதனேக்கேள்வியுற்ற கோவூர் கிழார்,பரிபவ மிகுந்து, அருமந்த குழந்தைகளைக் காப்பதற்கு ஆங்குக் காற்றினும் கடுகிச் சென்று, அரசனைக் கண்டு, ‘அரசே,

1. இஃது ஒரிடத்தில் ஏழாகச் சூழ்ந்திருக்த கோட்டை, இராமநாதபுரம் ஜில்லாவில் எழுவன் கோட்டை' என ஓர் ஊர் உளது.