பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨强 நல்லிசைப் புலவர்கள்

பெறுகுவை. அவனது வண்மையாற் செல்வம் பெறுதல் விறகு வெட்டிகள் விழுப்பொருள் எடுப்பது போன்ற அருமைப்பாடுடையதன்று ; அது பெறுவோமோ என ஐயமுற வேண்டா," என்றும் கிள்ளிவளவனது திண்மை, வண்மை, தண்மை, உண்மை முதலாய பெருங்குணங்களேப் புலப்படுத்திப் பாடினர். பின்னரும் பாணர் பசிக்குப்பகையாயிருக்கும் அவனது தன்மையை யும், மருதம் முல்லே கெய்தல் கில வளங்களேயும் வருணித் துப் பாடி உவப்பித்து, அரசன் அவையில் தங்கியிருந் தார். சின்னுட்கழிந்ததும் புலவர், தம் கண்டனுகிய கலங்கிள்ளியைக் காணவேண்டுமென்னும் அவா ஈர்க்க, அரசனிடை விடை பெற்று உறையூர் வந்து, கலங்கிள் எளியை இரு விழிகளும் குளிரக்கண்டு, உவகைகொளத் தழுவி, அளவளாவி, அவனது பகை வெல்லுக் திறன், பாணர்ப் புரக்கும் வண்மை, செங்கோல் மாண்பு முத லாயவெல்லாம் புலப்படும்படி வழுவறத் தேர்ந்தி வடித்து மதுரங் தழுவிய கவரசத் தண்டமிழ்ப் பாக்கள் பலபல பாடி, அரசனோடு இன்புற்று வாழ்ந்திருந்தனர். ஆாாய்ச்சி : பெயர் : பண்டைக் காலத்தில் நம் தமிழகத்தில் மக்கள் பெயரெல்லாம் பெரும்பாலும் அவரது சினை, குணம், தொழில், ஊர் முதலியவற்ருல் வழங்கப்பட்டு வந்தது போலவே, இப்புலவரின் பெயரும் கோஆக் கிழார் எனப் பிறந்த ஊர் பற்றி வழங்கப்பட்டதாகும். இதல்ை, இயற்பெயர் கிளக்க வேண்டாது கோவூர் கிழார் எனவே இவரை உலகம் அறிந்திருந்த பெருமை புலப்படும். ஒருவர்க்கு அவர் பிறந்த ஊராலும் பெயர் எய்துதல் மரபென்பது,

“ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி யவையனை பெறுமே.”