பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†8 நல்லிசைப் புலவர்கள்

185க்குமேல் 180க்குட்பட்ட காலமே சிலப்பதிகார காலமாகும். இமமுறையே கோக்க இப்புலவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்ருண்டின் இடைப்பகுதி என்பது தெளியப்படும்.

இவர் காலத்துப்புலவர்கள் : ஆலத்துனர் கிழார், வெள்ளேக்குடி நாகனர், மாருேக்கத்து கப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடன ர், ஆடுதுறைமாசத் தனர். கூலவாணிகஞ்சாத்தனர், ஐயூர் முடவர்ை, கல் லிறையனர், எருக்காட்டுர்த் தாயங்கண்ணனர், தாமப் பல்கண்ணனர்,உறையூர் முதுகண்ணஞ்சாத்தனர், மள் ளனர், இளந்தத்தர் முதலியோராவர். இவர் இளம்பரு வத்தினராயிருந்த போது முதியராய் விளங்கியவராவர் கபிலரும் பரணரும். இப்புலவரா ற்பாடப்பட்ட கிள்ளி வளவனே அகத்தில் நக்கீரரும் பாடுதலால், அவரும் இவரது காலத்தில் இருந்தவராவர்.

இவராற்பாடப்பட்டோர், சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவன், காரி யாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சோழன் குராப்பள் ளித்துஞ்சிய கிள்ளி வளவன், சிறுகுடிக் கிழான் பண் ணன் என்பவர். இவருள் பண்ணன், சோழன் குளமுந் றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனுக்கு நண்பனயும், சிறந்த கொடையாளியாயும், தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளனயும் விளங்கியபடியால், புலவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனக் குறித்துப்பாடிய 70-ஆம் புறப்பாட்டில் இவனது கைவண்மையையும், இவனது சிறு குடியூரின் வளத்தையும் சார்த்து வகையால் புகழ்ந் துரைத்துள்ளார். கிள்ளிவளவனுக்குப் பண்ணன் நண் பன் என்பது, யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய”

1. இக்காலம் சோதிடக் குறிப்புக் கொண்டும் துணியப்ப்ட்டுளது. செந்தமிழ், தொ.15 பக். 585.645,