பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器籍 நல்லிசைப் புலவர்கள்

குப் புலவர் மேற்கொண்ட சாதுரியமொழித் திறன் வியக்கற்பாற்று.

இவர் கூறும் உவமைகள் பொருத்தமும் திருத்த மும் உற்று, இவரது கவி வன்மையைக் காட்டுகின்றன. சேர பாண்டியர் குடைகள் பின்னே வரச் சோழனது குடை முன்னே தலைமை தோன்றப் போகும் தோற்றத் திற்கு அறத்தையும் அதன் வழித்தோன்றும் பொருளே யும் இன்பத்தையும் உவமையாகக் குறித்துள்ளார். பாணர் சுற்றங்களின் பசியால் மெலிந்து எலும்பு தோன் றும் விலாப்புடைக்குத் தோலுரித்த உடும்பையும். நுண்ணிய கோலாற்ருெடுத்த உடுக்கை வாத்தியத் துக்கு காராசத்தால் கோத்த ஆமையையும் ஒப்பிட் டுள்ளார்; குழவிக்குச் சுரக்கும் தாயின் பால் போலக் காவிரியின் வெள்ளம் உயிர்த்தொகுதியைக் காக்கும்,' என்று காவிரிச் சிறப்புக் கூறியுள்ளார். இக்கருத் தையே, சரயு என்பது தாய்முலே அன்னதிவ் வுரவு நீர்நிலத் தோங்கு முயிர்க்கெலாம், எனக் கம்பர் தமது இராமாவதாகத்துள் ஆற்றுப் பட லத்தில் அமைத்திருத்தல் காண்க வறுமைக்கு காகத்தின் கஞ்சை ஒப்பிட்டுள்ளார். தசையோடு கூடிய சோற்றுத் திரளேக்கு, இலையை இடையிட்டுக் கட்டிய மலராத முகையினையுடைய மாலேயின் பந்தை ஒப்பிட் டுள்ளார். வேட்டுவன், மானின் தசையைச் சொரிந்து கொணர்ந்த கடகமும், ஆயர் மகள் தயிர் கொண்டு வந்த மிடாவும் சிறைய, உழவர் மகளிர் குளத்துக் கீழ் விளைந்து களத்தின்கண் கொள்ளப்பட்ட வெண் னெல்லே முகந்து கொடுப்ப, உவந்து மீளும் பாண்டி நாடு," எனப் பாண்டிகாட்டுச் சிறப்பும் பண்டமாற்றும் கறியுள்ளார். பகை காட்டில் கிள்ளி வளவனது