பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நல்லிசைப் புலவர்கள்

போராகிய உழவர் அரிந்து, கட்டுகளாகக் கொண்டு போய்க் களத்திலிட்டுக் கடா விட்டு, அதரி திரித்து, கெல் மணிகளைக் குவை செய்வர்: பின்பு அரசர்க்கு ஆறில் ஒன்று கல்கி, ஏர்க்களம் பாடும் பொருநர் முதவி யோர்க்கு முகந்து கொடுத்து, எஞ்சியவற்றை வண்டி களில் உய்த்து, அகஞ்சேர்த்து, வந்த விருந்தோம்பி, வரு விருந்திற்கு எதிர் நோக்கி நிற்பர். இத்தகைய தாளாண்மை மிக்க வேளாண் குடியினர் பலர். இவ் ஆரின்கண் குழுமி வாழ்க்கை புரிந்து வருவாராயினர்.

இல்வூரின்கண், வேளாண்மரபிலே, இற்றைக்கு ஆயிரத்தெண்னுாறு ஆண்டுகட்கு முன்னர், மூலங்கி ழார் என்னும் புலவர் பெருந்தகையார் ஒருவர், தமிழ் உலகு உய்யத்தோன்றினர். இவர் தண்டமிழ் மொழி பில் வழங்கிய இலக்கண இலக்கிய நூல் துறைகளிலும், சமயச் சார்பான சாரமிக்க ஆகம அளவை முதலிய எனய கலைகளிலும் மிகுந்த புலமை வாய்ந்து, அக்காலத் துத் தமிழ் காட்டு முடியுடை வேந்தராலும், சிற்றரசர் பெருஞ்செல்வர் பலராலும் கன்கு மதிக்கப்பெற்றுப் பெரும்புலவராய் விளங்கினர்.

இவர் தம் இல்லக் கிழத்தியாரோடு இல்லற வொழுக்கின முட்டின்றி இனிதாய் நடாத்தி வருங்கால், இவர்தம்மனேவியார் ஓர் அருமந்த ஆண் மகவைக் கருவு யிர்த்தார். புலவர் அக்குழவிக்குச் சாத்தன் என்னும் தம் குல தெய்வப் பெயரைச் சார்த்திப் பொன்னே போலப் போற்றி வளர்த்தனர். குழந்தையும் இனி தாய்ப்பிறைமதி போல நாடொறும் வளர்ந்து விளங்கிக் குப்புற்றுத் தவழ்ந்து,குறுகடை கடந்து, தனது பூங்கை யால் பெற்ருேர் உண்ணும் உணவினே அளேந்தும் துழாவி யும், இட்டுக்தொட்டும், யாழினுமினிய மழலை மொழி