பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இற்றைக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னர்ச் சங்க காலத்தில், பல்வகைச் செல்வமுங் கொழித்து விளங்கிய கம் தமிழகத்தில், தமிழ்ப்பழங்குடியிலே தோன்றிய பெருஞ்சித்திரனுர் என்னும் புலவர் பெருக் தகை, இளம்பருவத்திலேயே சொல்லருஞ்சிறப்பின் கல்லாசிரியரை அடைந்து, அமிழ்தினுமினிய தமிழ் மொழியில் மிகப் பொலிந்திலங்கும் அகப்பொருள் புறப் பொருள்களின் இலக்கிய இலக்கணங்களேயும். ஏனேய நூல்களையும் குற்றமறக்கற்று, காவீறு படைத்த தொல் லாணே நல்லாசிரியராய்ச் சிறந்து விளங்கினர். இவர்தம் ஒப்புயர்வற்ற திப்பியப் புலமையைக் கண்ட பெரியோ ரெல்லாம், இப்புலவர் பெருமானே ஈன்றுவப்பதற்கு இவர்தம் இருமுது குரவரும் முன்னம் கோற்ற கோன்பு தான்் எப்பெற்றியதோ !” எனப் புகழ்ந்து வியந்தன்ர். புலவரின் வயதும் அறிவும் முதிர்ந்த தாயரும்,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச்

சான்ருே னெனக்கேட்ட தாய்." என்ற பொய்யா மொழியின்படி, அத்தகவுரைகளைக் கேட்டு, அகங்கொளாத மகிழ்வு பூத்தனர்.

புலவரது புகழ்மணம் தமிழகம் முழுவதும் பரவத் தலைப்பட்டது. புகழ் மணமிக்க புலவர்க்கு மணப் பகு வம் அண்மியதை அறிந்த அவர்தம் பெற்ருேர், திரு மணம் புணர்த்தக் கருதி, அறிவானும் உருவானும் திரு வானும் நிகர்த்த ஒரு குல மங்கையை கல்லோசையில் திருமணம் புரிந்தனர். புலவரும் மனேக் கிழத்தி