பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்தி குக் 8?

ーで

நேயமுடையவராய், ஈருடல் ஒருயி

மிக்க மனேவியுங் கற்றுத் துறை போய காதலர்க்குப் பொற்பு மிக்க மைக்தர் பலரை ஈன்றளித்தாள். இங் வனம் மக்கட்செல்வம் பெருகி வரப்பெற்ற புலவர், இளம்பருவமுதல் தமிழ்ச்சுவை மடுத்து, அதன் கண்ணே ஆழ்ந்து தோய்ந்து கிடந்த உள்ளம் அவிழ்ப் பதம் பெறுதற்குரிய தொழிற்றுறைகளிற் புகுதலே மறக் திருந்த்னராதலின், நாளடைவில் பொருள் வருவாய் குன்ற, அதனால் வறுமைக் கடல் இவரைச் சூழத்தலேப் பட்டது. என் செய்வது !

இருவே றுலகத் தியற்கை திருவேறு : தெள்ளிய சாதலும் வேறு." என்பது தமிழ் மறையின் உண்மையன்ருே பூரியரெல் லாம் செல்வத்தாற் பூரித்து வாழ, கம் புலவர் பெருமக்க ளுள் சிலர் கல்குரவால் நலிவுற்று வருந்துதற்கிருந்த உலகவியற்கையை என்னென்பேம் !

  • கல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழித்

தல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின் தாவின் கிழத்தி உறைதலால் சோளே பூவின் கிழத்தி புலந்து.' என்று ஒரு புலவர் கூறியதே இதற்கு உண்மைக் காரணமெனக் கொண்டு அமைவதே பொருந்தும் போலும் !

இலக்கிய இலக்கணக் கடல் கடந்தும், புலவர் அலக் கணுறுத்தும் வறுமைக் கடல் கடக்கும் வகை காணுது அதனுள் ஆழ்ந்தனர். ஆழவே, ஊழ் வினையாம் சுழி