பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்கிய வாயினர் . 7

‘’ பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர் ‘

-திருக்குறள் : 417

என்று கூறியுள்ளார்.

2 _

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி ‘

-- -திருக்குறள் : 418,

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியினை ஆற்றுகின்றன. மனித உடம்பில் எந்தவோர் உறுப்பும் இறைவனால் வீணாகப் படைக்கப்படவில்லை. ஒவ்வோர் உறுப்பின் இயக்கமும் உடலை இயக்க வேண்டப் படுவதாயுளது.

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து புலன்களை ஐம்பொறி என்பர். மெய்யால் உற்றறிதலும், வாயால் உண்ணலும், கண்ணால் காணலும், மூக்கால் நுகர்தலும், செவியால் கேட்டலுமாகிய செயல்கள் நடைபெறுகின்றன.

ஒலிக்கூட்டங்கள் ஒர் ஒழுங்கில் இயங்கும்போது சொற்கள் பிறக்கின்றன. இச் சொற்கள் செவிகளைத் தாக்குகின்றன. இந்த ஒசையும் ஒவியுமே உலகில் நிறைந் திருப்பதனால் திருநாவுக்கரசர் பெருமானும் இறைவனைப் பாடவந்தபோது, ‘ஒசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்று குறிப்பிட்டனர். செவிகளில் இயற்கையாக அமைந் துள்ள துளைகள் வழி ஒலிகள் செவியினுள்ளே புகுந்து அங்கிருக்கும் செவிப்பறையைத் தாக்கி ஒலிகளைப் பொரு ளுணரும் சொற்களாக்குகின்றன. பின்னரே நாம்