பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நல்லோர் நல்லுர்ை

தெய்வத்திடம் நான் ஆராத அன்பு கொண்டுள்ளேன். ஏ! வண்டே! நீ அந்தத் தேவதேவனிடம் தூதாகச் செல்ல வேண்டும்; என் ஆவலை எடுத்து மொழிய வேண்டும். இதுவே நீ எனக்குச் செய்யத்தக்க உதவி” என்று வண்டை நோக்கி மணிவாசகப் பெருந்தகையார் உரைக்கின்றார். - “ அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிகின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்று தாய் கோத்தும்பி’

-திருக்கோத்தும்பி : 5

“எங்கள் மனவிருள் கடந்த முதல்வனே! அரசனே! இந்திரன், பிரமன், திருமால் என்போர் பதவிகளை ஒரு பொருட்டாக மதியேன். என் வாழ்விற்கு முடிவு ஏற்பட் டாலும், உன்னுடைய அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகம் புகுந்தாலும், அங்கே உனது திருவருளுணர்ச்சியோடு இருக்கப் பெற்றால், அதனை இகழ மாட்டேன். உன்னை யொழிந்த வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்” என்று மிக்க மனவுறுதியோடு மொழிகின் றார் மாணிக்கவாசகர்:

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வுகுடி கெடினும் கன்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலேயிருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள்

உத்தமனே ‘ -திருச்சதகம் : 2.

இவ்வாறு தான் வணங்கும் ஒரே தெய்வமாகச் சிவ பெருமானையே தேர்ந்து, அவரடிகளையே சிந்திக்கப்