பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * *

ஆனந்த வெள்ளம் - 99

பெற்றால், சிவானந்த வெள்ளம் சித்திக்கப்பெறும் என்றும், அழுது அடி அடைதலே உயிர்கள் உய்யும் நெறி என்றும் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

நாட்டு மக்கள் உள்ளங்கவர்ந்த நாடோடிப் பாடல்கள் (Folk-Songs) வழி மாணிக்கவாசகர் தடங் கருணைப் பெருங்கடலாம் இறைவனின் அருட்பெருக் கினை வெளிப்படுத்தியுள்ளார். திருஅம்மானை, திருப் பொற்கண்ணம், திருக்கோத்தும்பி திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னுாசல், திருத்தசாங்கம், திருப் பள்ளியெழுச்சி முதலியன மாணிக்கவாசகர் காலத்து விளங்கிய சமுதாயப் பாடல்களாகும்.

இறைவனை அடைவதற்கு எளிய வழியாக மணிவாசகப் பெருந்தகையார் கொண்டது அழுது அழுது நிற்றலாகும்.

‘அடியார்களுள், யான் ஒருவனே பொய் நிறைந்த வன். என் மனமும் வஞ்சமுடையது. என் அன்பும் களங்கமற்றதன்று. ஆனால் தீவினையுடையேன் செய்த பிழையெண்ணி நைந்து உருகி அழுவேனாயின் உன்னை வந்தடையலாம். அதற்கு அருள் புரிவாயாக’ என்று அகங்குழைந்து உருகுகின்றார், திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை’யாம் மணிவாசகர்.

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவர் துறுமாறே ‘

-திருச்சதகம் : 90

இவ்வாறு சிவபுராணத்தில் ‘நமச்சிவாய’ என முழு முதற் பொருளாம் இறைவனை வணங்கித் தொடங்கியு