பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - நல்லோர் go லுரை

வழுவிலாத மாணிக்கவாசகர், அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர்பெறுவார் அச்சோவே’ எனப் பேரின்பப் பேறு பெற்றதனைப் பொருந்தக் கூறியுள்ளார். மும்மலத் தினையொழித்து முத்திக் கொடையினை முற்பட்டுச் சென்று பெறுங்கள் என்று உலக உயிர்களை விரைவு படுத்துகின்றார்: o

அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக்

கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்

பழமலர் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே ‘ -திருப்பாண்டிப் பதிகம் . 8

இவ்வாறு மாணிக்கவாசகர் ‘சிவபெருமானே உண் மைத் தெய்வம்; அவர் ஒருவரே தெய்வம்; அவரிடமே பற்றுச் செலுத்தவேண்டும். பற்றற்ற நிலை வாய்க்கப் பற்றற்ற அப்பரம்பொருளின் பாதமலர்களைப் பற்ற வேண்டும்; அதனாலே மாயப் பிறப்பறும்; மன்னிய இவானந்த வெள்ள நிலை வந்தெய்தும்” என்று குறிப் பிட்டு, தன் அடியவர்க்கு ‘மூல பண்டாரம் வழங்குகின் றான்; வந்து முந்துமினே” எனத் தன் பேரன்பின் பெருக்குக் காரணமாக, தான் பெற்ற சிவானந்தத்தை உலக உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்னும் உயரிய கோட்பாட்டில் எல்லோரையும் கனிந்த உள்ளத் தோடு கசிந்துருகி அழைக்கின்றார்.