பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமானவர்

12. எவ்வண்ணம் உய்வண்ணம்

தாயுமானவர் என்பது திரிசிரபுரம் என வழங்கிய திருச்சிராப்பள்ளியில் உள்ள சிவபெருமான் பெயராகும். அறிவறிந்த பெற்றோர் இட்ட பெயர்தாங்கிய தாயு மானவர், பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சான்றோர் ஆவர். வடநூற் கடலையும் தமிழ் நூற் கடலையும் நிலை கண்டுணர்ந்த நேரியர்; உலகப் பற்றின்றி உலக மக்கள்பால் கொண்ட கணக்கிலாக் கருணையால் உலக மக்கள் அனைவரும் ஒன்றெனக் கூறி அவர்கள் உயரிய நல்வாழ்வு வாழ்தற்கு உறுதுணையாக ஒப்பற்ற தம் திருப்பாடல்கள் வழிக் கருத்துச் செல்வத்தை வாரி வழங்கிச் சென்ற சன்மார்க்கச் சான்றோராவர்.

‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி இறைவன் இலங்கும் மாட்சியினைத் தெளி வுறச் சொன்ன சான்றோர் அவர். ‘எந்தெந்த நாளும் எனைப் பிரியாது என் உயிராய்ச் சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே” என்று ஆண்டவனை விளித்து நெக்குருகிப் பாடும் அவர் திருப்பாடலில் இந்த உண்மையைக் காணலாம்.

இந்த உலகத்து உயிர்களையெல்லாம் சைவ சித்தாந் திகள் பசு வென்றும், இறைவனைப் பதி யென்றும், உயிர்களின் உலகப் பற்றைப் பாசம்’ என்றும் கூறி முப்

7