பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நல்லோர் நல்லுரை

பொருள் உண்மை காட்டுவர். ‘ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்’ என்பர் பகவான் புத்தர். ஆசைதான் இந்த அவனியையே நடத்திச் செல்கிறது. பற்றின் இடனாயது’ உடம்பு. இந்தப் பற்று ஒர் எல்லைக்குள் அடங்குமானால், தவறு பெரிதாக விளைந்து விடாது. ஆனால் பற்று பெரும்பற்றானால், ஆசை பேராசையானால் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பேராசை பெருநட்டம்’ என்பது உலகத்தின் அனுபவ

மொழி.

இந்தப் பேராசையென்னும் பெருநோய் குறித்துத் தாயுமான தயாபரர் ஆழ்ந்து சிந்தித்துத் தம் கருத்து களை அழகிய தம் திருப்பாடலொன்றிற் பெய்துள்ளார்.

‘ஆசைக்கு ஒர் அளவேயில்லை. அகிலத்தை யெல்லாம் கட்டியரசாண்டாலும், அதனோடு அமையாது அலைமீதும் தங்கள் ஆணை செல்ல வேண்டும் என்றே நினைப்பர்.

“செல்வத்திற்கு அதிபதியாகக் கருதப்படும் குபேர னுக்குச் சமமாகக் கணக்கற்ற பொன்னைக் குவித்து வைத்திருப்பவர்களும், செம்பு, ஈயம், இரும்பு, வெள்ளி முதலான விலை குறைந்த உலோகங்களைக் கொண்டு, ரசவாத வித்தையின் பயனால் பொன்னாக மாற்றி அதிக விலைக்கு விற்கவே ஆசைப்படுவர்.

நீண்ட நாள் இனிதாக எவ்வகைத் துன்பத்தின் சாயலும் தொடராமல் வாழ்ந்து விட்டவர்களும், இனி நாம் இறந்து போய் விடுவதால் குடியொன்றும் முழுகிப் போய் விடாது என்று கருதுவதில்லை. மாறாக, நெடு நாள் வாழவைக்கும் காய கல்பத்தைத் தேடி நிற்பார்கள்.

இவ்வாறெல்லாம் பேராசை கொண்டு அலைப வர்கள் இறுதியில் தங்கள் நெஞ்சு புண்ணாவதையே