பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வண்ணம் உய்வண்ணம் 103

காண்பர். ஆனால் எல்லா வுயிர்களுக்கும் எளிதாக இயல்பாக நினைத்த மாத்திரத்தில் நடைபெறுவ தென்பது பசி தீர உண்பது, படுத்து உறங்குவது ஆகிய வைகளே ஆகும்.

‘எனவே எனக்கு எதுவும் வேண்டா; உள்ளதே போதும். பார்க்கும் இடங்களில் எல்லாம் இடையீடின்றி நீயே எங்கும் நிலவுகின்ற ஆனந்த வடிவமே! நான் உன் னிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று ஆகும். அஃது என்ன என்றால், நான் யான்’ என்ற செருக்கால் குழப்பம் அடைந்து, ஒன்றிலும் உறுதியில்லாமல், ஒன்றை விட்டு ஒன்றைத் தாவிப் பற்றிக்கொண்டு, பாசம் என்னும் பேராசைக் கடலிலே வீழ்ந்து அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். இதற்காக யான்’ என்னும் செருக்கற்ற தூய நிலையை நீ எனக்கு அருள்வாயாக’ என்று கேட் கிறார் தாயுமானவர். அவர்தம் அருமைத் திருப்பாட லைக் காண்போம்.

“ ஆசைக்கோர் அளவில்லை; அகிலம்எல் லாம்கட்டி

ஆளினும், கடல் மீதிலே ஆணைசெல வேநினைவர்; அளகேசன் நிகராக

அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடுநாள் இருந்தபேரும் நிலையாக வேஇனும் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ஆவர் எல்லாம்

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

உறங்குவதும் ஆகமுடியும், ! உள்ளதே போதும்; நான்நான் எனக்குளறியே

ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்