பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - == நல்லோர் நல்லுரை

பாசக் கடற்குள்ளே வீழாமல் மனதற்ற

பரிசுத்த நிலையை அருள் வாய்! பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம் அற நிறைகின்ற

பரிபூர ணானந்தமே “

ட பரிபூரணானந்தம் 10

இவ்வாறு பேராசையினைப் பெயர்த்தெறிய வேண்டும் எனக் கடிந்து கூறும் தாயுமானவர் பிறிதொரு பாடலில் மக்களுக்கு அமைய வேண்டிய அரும்பண்பு களைச் சுட்டிக் காட்டுகின்றார்.

ஏட்டுக் கல்வி மட்டும் கற்று விட்டால் போதுமா? கற்றதனால் மட்டும் அறிவு வந்து விடுமா? கல்லாதவர் களிடமும் அறிவு உளதே! அவ்வறிவு அவர்கள் வாழ வழி காட்டி விடும் என்று கூறி விட முடியுமா? முடியா தன்றோ! கல்வியும் வேண்டும்; அதனோடு நல்லது இது. தியது. இது என்று எந்த ஒரு பொருளைப்பற்றி” துணிந் தறிந்து உண்மை காணும் திறனும் வேண்டும். அடுத்து, கல்வி ஞானமும் அறிவு மேம்பாடும் மட்டும் இருந்து விட்டால் அஃது அமையாது. கேள்வி ஞானமும் கைவரப் பெற வேண்டும்.

‘கற்றில னாயினும் கேட்க’ என்பார் திருவள்ளுவர். செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம், அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்றும் குறிப்பிடுவார். நம் மனத்தில் எழும் ஐயப்பாடுகளைப் போக்குவதற்குக் கற்றுவல்ல அறிஞர்களோடு உரையா4 உண்மைத் தெளிவு பெற வேண்டும். கல்வி, அறிவு, கேள்வி ஆகிய மூன்றும் கைவரப் பெற்றோர், இளகிய நெஞ்சம் வாய்ந்த வராயிருக்க வேண்டும். பிற வுயிர்கள்மாட்டுக் கருணை காட்டாத கல்வி கேள்வியினால் சமுதாயம் எய்தும் பயன் தான் என்னை? எட்டி பழுத்த கதையாக, காட்டிலெரிந்த