பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வண்ணம் உய்வண்ணம் 105

நிலவாக அங்கணத்தில் உக்க அமிர்தமாக அன்றோ அஃதாகும். ஐந்து பெருங் குற்றங்கள்-பஞ்சமா பாதகங்கள் என்று, கொலை, களவு, காமம், பொய், கள்ளுண்ணலைக் குறிப்பிடுவர். இவ்வைந்து குற்றங் களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகும். ஒருவரை ஒன்று முதற்கண் போய்ப் பற்றிக் கொண்டால் மற்ற நான்கும் அடுத்தடுத்து அணி அணியாகப் படை யெடுத்து அவரை ஆட்கொள்ளும். எனவே வாழ்வில் மானிடப் பிறவியெடுத்த ஒவ்வொருவரும் இந்த ஐந்து பெருங் குற்றங்களும் தம்மையணுகாமற் பார்த்துக் கொள்ளவேண்டும். வடமொழியாளர் இவற்றைப் ‘புருஷார்த்தங்கள்’ என்பர். அவையே அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அறத்தாற் பொருளிட்டி, அறவழியில் நின்று, இன்பந் துய்த்து இம்மையில் வாழ்பவனே, மறுமையில் வீட்டின்பம் பெற முடியும்; பிறந்த பிறவியின் பெரும்பயனை ஈட்ட முடியும். இவ் வாறாகத் தாயுமான தயாபரர் கல்வி நிரம்பி, அறிவு மேம்பட்டு, கேள்வி நிறைந்து, கருணை மிகுந்து, நோக்கம் நன்றாகி, ஐம்பெரும் பாசங்கள் களைந்து, அறத்தாற்றின் நின்று, பொருளிட்டி, இன்பந் துய்த்து, இறுதியில் வீட்டின்பம் பெறும் வகையினை வற்புறுத்தி நிற்கக் காணலாம்:

‘ கல்லாத அறிவும், மேல் கேளாத கேள்வியும்

கருணை சிறிது ஏதும் இல்லாக்

காட்சியும் கொலைகளவு கள் காமம் மாட்சியாக்

காதலித் திடுநெஞ்சமும் பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள்

பொருந்துகுணம் ஏதும் அறியேன்:

புருடர்வடி வானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன்