பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நல்லோர் நல்லுரை

சொல்லின் பொருளை மூளையின் ஆற்றல்கொண்டு விளங்கிக்கொள்கிறோம். எனவே செவிகள் கேள்வி யறிவால் துளைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு கேள்வி யறிவினைப் போற்றிப்போற்றி நுட்பமான அறிவை நிறைத்துக்கொள்ளும்போது செவிகள் கேட்கும் தன்மை உடையனவாகக் கருதப்படும்.

கேள்வியாற் செவிகள் முற்றும்

தோட்டவர் உணர்வின் உண்னும் அமுதத்தின் சுவையாய் நின்றாள் (கம்பராமாயணம்; சவரி பிறப்பு நீங்கு படலம்: 7)

என்று கம்பநாடர் குறிப்பிடுவதுபோலக் கேள்விச் செல்வத்தினை விருப்பமாய் ஏற்றுக்கொண்ட செவிகளே அமுதமாகிய சுவையைப் பெற்று உணர்வாய் விளங்கும் பெற்றியனவாகும்.

இவ்வாறு கேள்வியறிவு கொண்டு துளைக்கப்படாத செவிகள், இயற்கையான துளைகள் அமைந்து ஓசையைக் கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மையுடையன வாகும்.

இதனையே இரும்பல் காஞ்சி என்ற நூல்,

எய்கணை விழுத்துளை அன்றே செவித்துளை மையறு கேள்வி கேளா தோர்க்கே ‘

என்று குறிப்பிட்டுள்ளது.

திருத்தக்க தேவரும் இவ்வாறு கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் உடையவரை ஒட்டைச் செவியர்’ என்கிறார்: