பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார்-உமறுப்புலவர்

13. மதி மறந்தவர்

பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாட்டில் வாழும் மக்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே கடவுள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு மதங்களை - சமயங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கடவுளர்களை வழிபட்டாலும் அவரவர் தம் வாழ்க்கை யினை அமைதியோடு நடத்தி வருகிறார்கள். ஞானத் திலும் பரமோனத்திலும் நம் பாரத நாடு பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதியாரும் பாடினார்.

முதலாவதாக உமறுப் புலவரின் சீறாப் புராணக் கடவுள் வாழ்த்துப் பாடலை எடுத்துக் கொள்வோம். முதலில் அந்தப் பாட்டைத் தெளிவுற நோக்குவோம்:

சிறந்தமெய்ப் பொருளை அழிவிலா மணியைத்

தெரிந்துமுக் காலமும் உணர்ந்து

துறந்தவர் இதயா சனந்திருந் தவனைத்

தொடரின்ப துன்பமற் றவனைப்

பிறந்தபல் லுயிரின் மனத்தள வுறைந்து

பிறப்பிறப் பென்றிலா தவனை

மறந்தவர் சுவர்க்கப் பதியையும் மறந்து

மண்ணினில் மதிமறந் தவாே. ‘

-சீறாப்புராணம்-கடவுள் வாழ்த்து.