பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I08 நல்லோர் நல்லுரை

இந்தப் பாடல் சீறாப்புராணப் பாடல் என்பது விளங்கும். இசுலாமியர்களின் ஒப்பற்ற பெரியோரான முகம் மது நபி அவர்களின் வரலாற்றைக் கூறுவது சீறாப் புராணமாகும். ‘சீறத் என்ற அரபுச் சொல்லே ‘சிறா’ என்று ஆனது. சீறத்’ என்ற சொல்லுக்குப் புகழ்’ என்பது பொருளாகும். துாய வாழ்க்கை வாழ்ந்து புகழ் எய்திய ஒருவரின் வரலாற்றை விளக்குவது சீறாப்புராண மாகும். எனவே சீறாப்புராணம் என்றால் பெரியார் புகழ் விளக்கும் பழைய வரலாறு என்று ஆகும். நபிகள் நாயகத்தின் பிறப்பு, வளர்ப்பு, வெற்றி, செய்தி முதலிய வற்றைக் கூறும் இந்நூலினைத் தமிழில் இயற்றிய புலவர் உமறுப்புலவர் ஆவர். இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; எட்டையபுரத்து அரசவையில் இருந்த புலவருள் ஒருவர். இதே எட்டையபுரத்து அரசவையின் ஆதரவு பெற்றவர்தான் இந்த நூற்றாண்டின் முற்பகுதி யில் வாழ்ந்து மறைந்த பாரதியாரும். எனவே புலவர் களை வழிவழியாக ஆதரித்துப் போற்றிவந்த எட்டைய புரத்து அரசவை ஆதரவு பெற்ற புலவராம் உமறுப்புலவர் இயற்றிய சிறந்த நூல் சீறாப்புராணமாகும்.

இனிப் பாடலின் உள்ளே நோக்குவோம். முதலாவ தாக இந்தப் பாடலின் வணக்கத்திற்குரிய அல்லாவின் அருமைப் புகழ் பேசப்படுகின்றது.

சிறந்த மெய்ப்பொருள் : உலகில் பொருள்கள் பல உள்ளன. பொருள் என்றால் பொதுவாகப் பணத்தைக் குறிக்கும். இந்தப் பணம் இந்த உலக வாழ்க்கைக்கு மிகவும் வேண்டப்படுவதாகும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றார் திருவள்ளுவர். ஆனால் இந்தப் பொருளாகிய செல்வம் உண்மையான செல்வ மாகுமா? நிலையாக் நிலைத்திருக்கும் பொருளாகுமா? அழியாத பொருளாகுமா என்றால் இல்லை என்று கூறி