பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி மறந்தவர் I09

விடலாம். ஆறிடும் மடுவும் போல் ஆம் செல்வம்’ என்பர் பெரியோர். யாரிடமும் செல்வம் நிலைத்து நிற்பதில்லை. செல்வம், செல்வோம்’ என்று கூறி ஒருவரிடமிருந்து போய்விடுகிறது. எனவே அதனை மெய்யான பொருளாகச் சொல்ல முடியாது. இது போன்றே உலகில் நாம் காணும் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடிய தன்மை உடையதாகும். ஏன்? மனிதர் களையே எடுத்துக் கொள்வோமே! ■ “ நெருகல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும்

பெருமை யுடைத்துஇவ் வுலகு ‘ -திருக்குறள் : 836 என்று திருவள்ளுவர் கூறுவது போன்று நேற்றைக்கு இருந்தவர் இன்றைக்கு இல்லை. இதேபோன்று ‘இன்றைக் கிருப்பாரை நாளைக்கிருப்பார் என்று எண்ணவே சதமில்லை நெஞ்சே என்று கூறுவர் அனுப வப்பட்ட பெரியவர்கள். எனவே இந்த உலகில் மெய்ப் பொருளாகக் கருதத்தக்கது இறைவன் என்ற ஒரு பேரருள் பெருத்திறத்தையேயாகும். மெய்ப்பொருள் களுக்கு எல்லாம் சிறந்த மெய்ப்பொருளாக விளங்குபவர் ஒப்பற்ற உயரிய கடவுளாவர். எனவே உமறுப்புலவர் இறைவனை முதலில் சிறந்த மெய்ப்பொருள்’ என்றார். அடுத்து ஆண்டவனை அழிவிலா மணியை’ என்றார். மணிகள் பலவகைப்படும். மாணிக்கம், வைரம், வைடுரி யம், கோமேதகம், புட்பராகம் முதலியனவெல்லாம் மணிகள் என்று கூறப்படும். இவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றுவரை மனிதனின் முயற்சியும் ஆசையும் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பாடுபட்டுச் சேர்க்கும் இவ்விலையுயர்ந்த மணிகள் அழியாத தன்மை வாய்ந்த னவா என்றால் அதுதான் இல்லை. அழிவிற்கு ஆளாகும் இம்மணிகள் மனிதனை ஆட்டி அலைக்கழித்து