பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I IO நல்லோர் நல்லுரை

மனித மனத்தின் அமைதியையே அழித்துவிடுகின்றன. எனவே கடவுள் ஒருவர்தான் அழிவிலாத மணியாக நின்று மனிதனின் மனத்தில் அமைதியெனும் நிலையினை அருளுகின்றார்.

மூன்றாவது தொடர் தெரிந்து முக்காலமும் உணர்ந்து துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை’ என்பதாகும்.

வாழ்க்கையில் ஒருவரைத் தெரிந்து கொள்வது வேறு: உணர்ந்து கொள்வது வேறு. தெரிந்து கொள்வது என்பது மேற்போக்கான அறிமுகமாகும். கண்ட மாத்தி ரையில் ஒருவரைத் தெரிந்துகொள்ள முடியும்; ஆனால் அவரோடு நெருங்கிப் பலமுறை பழகினால்தான் அவரை உணர்ந்து கொள்ள முடியும். அதுவும் உணர்ச்சியோடு அளவளாவி நெருங்கிப் பலமுறை பழகிய பின்னரே ஒருவரை உள்ளவாறு உணர்ந்து கொள்ள முடியும். எனவே உணர்தல் என்பது ஆழ்ந்த பொருளைத் தருகின் றது. இந்த உலகத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றார்கள். அதாவது நல்ல பெரியவர்கள் - சான்றோர்கள் - தமக் கென வாழாமல் பிறர்க்கென வாழும் பெரியோர்கள் வாழுகின்ற காரணத்தினால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது - நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் சங்ககாலப் பாண்டிய மன்னன் ஒருவனும் பாடிவிட்டுப் போயுள்ளான்.

இத்தகைய பெரியவர்கள் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களையும் முற்ற அறிவார்கள். நமக்கு இறந்த காலத்தில் நடந்தவை தெரியும்; நிகழ்காலத்தில் நடைபெறுவதை ஒரளவு அ றி ேவ ம்; ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்க விருக்கின்றது என்பது ஒரளவும் தெரியாது.