பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 - - - நல்லோர் நல்லுரை

நெஞ்சகமே கோயில் கினைவே சுகந்தம்-அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”

-பராபரக் கண்ணி. 151

என்றும் பாடினர். வடலூர் வள்ளற்பெருமானார் நம் இராமலிங்க சுவாமிகள் அவர்கள்,

பொய்வந்த உள்ளத்திற் போகாண்டி-அந்தப்

புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி என்று இறைவன் பொய்யுள்ளத்திற் புகாத நிலையினைப் பொருத்தமுறப் புகன்றுள்ளார்.

அடுத்து, இறைவனைத் தொடர் இன்ப துன்பம் அற்றவன்’ என்று உமறுப்புலவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகில் நன்மை தீமை என்ற இரண்டும் உண்டு. பாவ புண்ணியங்களே நம்மைத் தொடர்ந்து , வருகின்றன என்பர். இருளும் ஒளியும், உண்மையும் இன் மையும், இன்பமும், துன்பமும் இவ்வுலகில் எந்நாளும் உண்டு. மனித மனம் இன்பத்தையே ஏங்கி நாடி அலை கின்றது. துன்பம் வருமானால் தாங்கிக்கொள்ளும் ஆற்ற லின்றிக் கலங்குகின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் இன்ப துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் இறைவனோ இன்ப துன்பங்களைக் கடந்தவன்; வேண் டுதல் வேண்டாமை இல்லாதவன்; இன்புறு சோதியாக இணையற்று விளங்குபவன், எனவே இன்ப துன்பங்கள் இறைவனை ஒருநாளும் ஆட்டி அலைக்கழிப்பதில்லை.

அடுத்து, பிறந்த பல்லுயிரின் மனத்தளவுறைந்து பிறப்பிறப் பென்றிலா தவனை’ என்றார் உமறுப் புலவர்.

இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் பிறக்கின்றன; வளர்கின்றன; வாழ்கின்றன; இறுதியில் மடிந்து முடி