பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி மறந்தவர் I 13

கின்றன. தோற்றம் என்பது ஒன்று உண்டென்றால் மறைவு என்பது ஒன்றும் உண்டு. இறைவனோ தோன்றிய உயிர்களில் எல்லாம் உறைகின்றான். இறை” என்ற சொல்லிற்கே தங்குதல்’ என்பது பொருள். இறை வன் தான் தோற்றுவித்த-படைப்பித்த எல்லா உயிர் களிலும் தங்கி உறைகின்ற காரணத்தினால்தான் ‘இறைவன்’ என்று வழங்கப்படுகின்றான். மனத்தளவு உறைந்து’ என்றால் மனமாகிய எல்லையில் தங்கி” என்பது பொருளாகும். தாயுமானவரும் பார்க்கின்ற மலரில் எல்லாம் பரமனே உறைவதாகவும், எனவே தாம் அப் பணி மலரைப் பறிக்கவும் உள்ளங் கூசுவதாகவும் பாடியுள்ளார்.

பிறப்பு இறப்பு என்ற இந்த இரண்டும் உலகின் எல்லா வுயிர்க்கும் வருவனவாகும். ஆனால் இறைவனோ எனில் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாவன். இதனையே திரு வாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகையார், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி என்றார். சிட்டுக் குருவிக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாகப் பாட வேண்டும் என்று ஒரு புலவரைக் கேட்க அவர் பிறப்பிறப் பில் என்றார். இத் தொடர் சிட்டுக்குருவிக்கு எவ்வாறு பொருந்துகின்றது, என்று பார்ப்போம். சிட்டு | குருவிக்குப் பிறப்பு இறப்பில்-அதாவது வீட்டின் இற வாணத்தில் ஆகும். சிட்டுக் குருவி இறவாணத்தைத் தானே பிறக்குமிடமாகக் கொள்கிறது. இத் தொடர் ஆண்டவனைக் குறிக்கும்பொழுது பிறப்பு-இறப்புஇல்-இல்லாதவன் என்று ஆகும். வடலூர் வள்ளலார் இறைவன், ‘பிறப்பும் வளர்ப்பும் இல்லாதவன்; அவன் அருட்பெருஞ்சோதியன்; சாதி சமயச் சண்டை வேண்டா. சன்மார்க்க நெறி நடப்போம். வாரீர்” என்று உலகவரை நோக்கி அறைகூவல் விடுக்கின்றார். அப் பாடலைக் காண்போம்: