பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 நல்லோர் நல்லுரை

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதியென் னுளத்தே

திேயிற் கலந்து நிறைந்தது நானும்

கித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமுஞ் சமயமுங் தவிர்த்தே

சத்திய சுத்தசன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே.”

இது மட்டும் அல்ல: ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ் விொரு பெயர் கூறி ஒவ்வொரு கடவுளை வணங்கி வழிபட்டாலும் தெய்வம் ஒன்று என்பதே பெரியோர்கள் கண்ட உண்மையாகும். திருநாவுக்கரசர், கடவுள் ஒருவரே தான்; பல கடவுள்கள் இல்லை; ஒரே கடவுள் தான். தம் பேராற்றலால் கடவுள் உலகைப் படைத் துள்ளார். அந்த ஒரே கடவுளே பல வடிவங்களில்-பல பெயரில். காட்சி தருகின்றார்; பல செயல்களைச் செய்து வருகின்றார். படைத்தல்,காத்தல் அழித்தல் ஆகிய முத் தொழில்களையும் சிறப்பாகச் செய்து வருகின்றார்” என்று குறிப்பிடுகின்றார் பண் சுமந்த பாடலைக் காண்போம்:

ff

நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும்கின்ற பாதனாம் பரமயோகி பலப்பல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினானைப் பெருவேளுர் பேணினானை ஒதநாவுடையன் ஆகி உரைக்குமாறு உரைக்கின்றேனே ‘ -திருநாவுக்கரசர் தேவாரம் :579. (திருநேரிசை-நான்காந்திருமுறை-திருப்பெருவேளுர்)

இத்தன்மை வாய்ந்த இறைவனை மறந்தவர் சுவர்க்கப் பதியையும், மறத்து மண்ணில் மதிமறந்தவரே’ என்கிறார் உமறுப் புலவர்.